Shuru
Apke Nagar Ki App…
WhatsApp status banavo ta mil Samara Shahar thi samband
முத்துஇருளன்
WhatsApp status banavo ta mil Samara Shahar thi samband
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by முத்துஇருளன்1
- மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (மே.1) காலை நடைபெற்ற நிலையில் நண்பகலில் வைகை கரையோரமுள்ள ஓபுளா படித்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்வை முடித்து தங்களுடைய விரதத்தை நிறைவு செய்தனர் கொண்டனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர்.1
- இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு எட்டப்படவில்லை ஆகவே இன்று தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர். விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.1
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- Post by Natarajan Pitchaimani1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மழை நின்ற பின்னரும் நீண்ட நேரம் வானத்தில் இடி மின்னல் நீடித்தது. ஆண்டிப்பட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் பாண்டியன் (வயது60) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது 2 மாடுகளை கொட்டத்தில் கட்டி வைப்பதற்காக பிடித்து சென்றார். அப்போது திடீரென்று ஏற்பட்ட மின்னல், பாண்டியன் மற்றும் மாடுகளின் மீது தாக்கியது. இதில் இரு பசு மாடுகளுடன் விவசாயி பாண்டியன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாடுகளுடன் விவசாயி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.1
- மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் ஏராளமான தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கினார்கள் .அதன் அடிப்படையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிணவறை எதிரே உள்ள நேதாஜி மெடி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் சார்பாக சுமார் ஆயிரம் பேருக்கு தக்காளி சாதம் ,தயிர் சாதம், புளி சாதம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி ஹரி கிருஷ்ணன் செய்திருந்தார்.1