கோபி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கோபி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மேற்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு )ஏ. கே. செல்வராஜ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கினார். அருகில் கோபி நகரக் கழகச் செயலாளர் பிரினியா கணேஷ், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் வி கே சி சிவக்குமார், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் சசி பிரபு, மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் எம் விவேகானந்தம், மாவட்ட கழக இணைச் செயலாளர் ரேவதி தேவி, துணைச் செயலாளர் சுலோச்சனா நடராஜ், ஒன்றிய செயலாளர்கள், வி பி பிரபு, வேலுமணி,எஸ் பி எஸ் பழனிச்சாமி, மணிகண்ட மூர்த்தி யோகா பழனிச்சாமி வி.ஏ பழனிச்சாமி, சிவக்குமார், மாவட்ட ஐடி பிரிவு கருத்திரமன், சிறுவலூர் மாரப்பன், மகுடேஸ்வரன், அனு நாகராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோபி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கோபி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மேற்கு மாவட்ட
செயலாளர் (பொறுப்பு )ஏ. கே. செல்வராஜ் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கினார். அருகில் கோபி நகரக் கழகச் செயலாளர் பிரினியா கணேஷ், மாநில அம்மா பேரவை
இணை செயலாளர் வி கே சி சிவக்குமார், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் சசி பிரபு, மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் எம் விவேகானந்தம், மாவட்ட கழக இணைச் செயலாளர் ரேவதி தேவி, துணைச் செயலாளர் சுலோச்சனா நடராஜ்,
ஒன்றிய செயலாளர்கள், வி பி பிரபு, வேலுமணி,எஸ் பி எஸ் பழனிச்சாமி, மணிகண்ட மூர்த்தி யோகா பழனிச்சாமி வி.ஏ பழனிச்சாமி, சிவக்குமார், மாவட்ட ஐடி பிரிவு கருத்திரமன், சிறுவலூர் மாரப்பன், மகுடேஸ்வரன், அனு நாகராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் நிகழ்வாக பொதுக்கூட்டமானது ஈரோடு மெயின் ரோடு சீதா கல்யாண மண்டபம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல்குமார் ஆகியோர் முன்னிலையில் கீதா ரவீந்திரன்,டாக்டர் சித்ரா கணேசன், லோகிதா வெள்ளியங்கிரி, வழக்குரைஞர் கீர்த்தனா சித்தார்த்,ஸ்ரீவித்யா சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இப்பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் சிறப்புரையும், திரௌபதி பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் எழுச்சியுரையும் ஆற்றினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, டாக்டர்.ரவீந்திரன்,சுபி தளபதி, பொன்மணி கார்த்தி, டாக்டர் ராஜா, சிற்பி மகேஸ்வரன், சக்திவேல், மாதேஸ் சிவா, காகுத் கார்த்திகேயன், சிவக்குமார், சுரேந்தர் Ex Army, மனோஜ்குமரன்,முரளிதரன், சதிஸ்குமார், பொன் விஸ்வநாதன் நாடார், மகாலிங்கம் ராமசாமி, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு வரவேற்புரையும், முடிவில் நகர பொதுசெயலாளர் மதன்குமார் நன்றியுரையும் ஆற்றினர். அதனைத் தொடர்ந்து விசர்ஜன் விநாயகர் திருமேனிகள் ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க பெண்கள் கொடி அணிவகுப்புடன் தெய்வம், ஆஞ்சநேயர் வேடம், நடன குதிரை ஆட்டம், கம்பீர யானை, காந்தார பஞ்சுர்லி கடவுள் வாராகி வாகன ரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பெண்கள் முளைப்பாரி, ஒளிரும் விளக்குகள், பூ கரக கலசம் ஆகியவற்றை எடுத்து முன் செல்ல 2007 பெண்கள் விசர்ஜன விநாயகர் திருமேனிகளை கையில் எடுத்து பிரமாண்டமான ஊர்வலமாக அணிவகுக்க விசர்ஜன விநாயகர் திருமேனிகள் ஊர்வலத்தை ஆன்மீகச் செம்மல், தொழிலதிபர் கே.வி. சோமசுந்தரம் மரக்கடை உரிமையாளர் ஜி.எஸ். நடராஜன் மற்றும் தொழிலதிபர் திருநாவுக்கரசு ஆகியோர் காவிக் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 2007 பெண்கள் விநாயகர் திருமேனி ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஊர்வலமானது சீதா கல்யாண மண்டபத்திலிருந்து தொடங்கி ஜீவா செட், புதுப்பாளையம் பிரிவு, பஸ்நிலையம், சிக்னல், மார்க்கெட், எம்.ஜி.ஆர் சிலை, கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சென்று நஞ்சை புளியம்பட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியின் கோபி நகர தலைவர் கருப்புசாமி, நகர செயலாளர்கள் மௌலி, அர்ஜீன், சபரி நகர துணைத்தலைவர்கள் கோபால், கருப்புசாமி, நாகராஜ், நகர பொருளாளர் மனோஜ்குமார், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் பாஸ்கர், தங்கவேல் சுஜேஸ், சௌந்தர், முரளி, ரவி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.4
- பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.1
- விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.4
- கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை சாலையில் தேங்கிய மழை நீர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் வானம் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கரூர் மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கரூர் மாநகரம், வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1
- ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....1
- வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ் தட்டுப்பாடு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.1
- ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.4