தர்மபுரி சட்டமன்ற குழுவை ஆய்விற்க்கு அழைத்த பொதுமக்கள் - மறுத்த சட்டமன்ற குழு பொது மக்கள் ஆவேசம் தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது, இதில் முதல் கட்டமாக 19 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் கடந்த 2010 ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது, பாதாள சாக்கடை வழியாக வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஏரிகளில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுக்கள்,சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. முதல் கட்ட திட்டமே முழுமையாக செயல்படுத்தபடாமல் தோல்வியடைந்த நிலையில், 2ம் கட்டமாக மீதமுள்ள 14 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மதிகோன்பாளையத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு பகுதியை சட்டமன்ற குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் பார்வையிட சென்றனர். அப்போது பொதுமக்கள் சட்டமன்ற குழுவை முற்றுகையிட்டு காந்திப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள 374 குடும்பங்கள் உள்ள எங்கள் பகுதியில் பாதாளச்சாக்கடை அமைந்துள்ளது, இந்த பாதாள சாக்கடை நீர் சுத்திகரிக்ப்படாமல் நேரடியாக ஆறு மற்றும் ஏரிகளில் நேரடியாக கலப்பதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்க்கு தேவையான நீர் மாசடைந்து, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது, மேலும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்கவும் முடியவில்லை, நிலத்தடி நீர் கெட்டு போய் பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதனால் மனிதர்கள், கால்நடைகள் என அணைவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு அவதியடைந்து வருவதாகவும், எனவே பாதாள சாக்கடை திட்டத்தை கைவிட கோரி வலியுறுத்தினர். மேலும் இதனை காண அப்பகுதிக்கு வருமாறு பொதுமக்கள் சட்டமன்ற குழு தலைவர் வேல்முருகனை அழைத்தனர். ஆனால் அவர் அப்படி எல்லாம் வர முடியாது சட்டமன்ற குழு குறிப்பிட்ட இடங்களை மட்டும் தான் ஆய்வு செய்ய முடியும் என கூறினார், இதனால் பொதுமக்கள் ஆவேசமடைந்து பாதாள சாக்கடை திட்டம் நிறுத்தபடாவிட்டால் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிவித்ததால் சட்டமன்ற குழு ஆய்வின் போது பரபரப்பு ஏற்பட்டது.

- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- பாப்பாரப்பட்டியில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட தவெக-வினர் ரத்ததானம். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று பாப்பாரப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். மேலும் தவெக தலைவர் விஜய் கட்சி அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனாலும் தலைவர் எடுத்துள்ள முடிவு மற்றும் அவர் செல்லும் பாதையில் துணை நின்று அவர் பயணம் வெற்றி பெற உறுதியாக இருப்போம் என தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் கள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொங்கல் கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு இன்று கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- கிருஷ்ணகிரி அவதானபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென பிரேக் பிடக்காததால் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்த ஆறு கார்களும் ஈச்சர் லாரி மீது ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கனரக வாகனம் உட்பட ஆறு கார்கள் பலத்தை சேதம் அடைந்தன இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயத்துடன் 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஈச்சர் லாரி வாகன ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து படித்துறை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் படித்துறை பராமரிப்பு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்1