Shuru
Apke Nagar Ki App…
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள். 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Nataraj
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள். 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- Natarajகுமாரபாளையம், நாமக்கல், தமிழ்நாடு💣21 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.1
- முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 48 வாரமாக திண்ணை பிரச்சாரம் இன்று அரூர் எம்ஜிஆர் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது இதில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களும் திமுக அரசால் நிறுத்தப்பட்டது இவை அனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது1
- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- தெரிந்து கொள்வோம்.1
- எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...1