Shuru
Apke Nagar Ki App…
சேலம் திமுகவில் வெடித்த உட்கட்சிப் பூசல்? VIREL VIDEO சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்
Salem_Updates
சேலம் திமுகவில் வெடித்த உட்கட்சிப் பூசல்? VIREL VIDEO சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் சர்க்கரை சரவணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திரன்,கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டி வருவதாகவும், இதனால் அமைச்சரின் வெற்றி கேள்விக்குறியாகி? என தெரிவித்துள்ளார்1
- பாலக்கோடு திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் பேட்டி. பாலக்கோடு தொகுதியில் 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.அன்பழகன், விவசாயம், வளர்ச்சி சார்ந்த திட்டங்களையும், நீர்ப்பாசன திட்டங்களையும், இதுவரை செய்யவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு, ஒவ்வொரு இடத்திலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. பழங்குடியினர், இஸ்லாமியர், ஆதிதிராவிடர் வாழக்கூடிய பகுதிகளில் கூட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இதுவரை 6 கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. 25 ஆண்டு காலமாக அமைச்சராகவும் நிறைவேற்றவில்லை. இரண்டு தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால், கூட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் போது கேபி அன்பழகன் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது நினைத்திருந்தால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். விவசாயத்தை நம்பி இருக்கின்ற பாலக்கோடு பகுதிகளுக்கு நீர் பாசன திட்டங்கள் இல்லை. இங்கு இருக்கின்ற சர்க்கரை ஆலை சிறந்த சர்க்கரை ஆலை ஆக விருது பெற்றது. ஆனால் கரும்பு உற்பத்தி இல்லை என்பதால், மூடும் நிலைமையில் இருந்து வருகிறது. ஒரு அமைச்சராக இருப்பவர் நினைத்திருந்தால், இதை செய்வதற்கு ஐந்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் எதையும் செய்யாமல் 25 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதனால் சர்க்கரை ஆலை மூடும் நிலையில் இருந்து வருகிறது. இவரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு பயமான நிலை தான் இருந்து வருகிறது. இவரை கேள்வி கேட்ட ஒருவரை தாக்கியுள்ளனர். தற்போது அவரை எதிர்த்து நாம் போட்டியிடும் போது மக்கள் ஓரணியில் திரண்டு நம் பின்னாடி இருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியை தர தயாராகி இருக்கிறார்கள். அப்பப்ப தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் எல்லோருக்கும் வீடுகளுக்கு சேலை கொடுக்கிறார்கள். எங்களுக்கு வேலை தான் முக்கியம் என சொல்கிறார்கள். வேலை இருந்தால் சேலையை நாங்களே வாங்கிக் கொள்வோம். இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறார். இப்பொழுது நான் கொடுத்திருக்கின்ற வாக்குறுதி உங்கள் பேரக் குழந்தைகள், அடுத்த தலைமுறை வரும்போது நம்பிக்கை கூறிய வகையில் ஒரு வேலையை கொடுப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறேன். இந்த பகுதியில் இருந்து தக்காளி, மாம்பழம், தென்னை உள்ளிட்ட விவசாய பொருட்கள் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரித்து அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கின்ற வகையில் மதிப்பு கூட்டு தொழிற்சாலையை கொண்டு வருவேன். பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தக்காளி கூழ் பேக்டரி கொண்டு வருவேன். காய்கறிகள் இந்த பகுதியில் அதிகமாக உற்பத்தி ஆகிறது. ஆனால் ராயக்கோட்டை சென்று அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பெரிய சந்தை உருவாக்கி, ஒரு வளர்ச்சிக்கான பாலக்கோடு மக்களிடம் ஒப்படைப்பேன் அது மே நான்காம் தேதிக்கு பிறகு நடைபெறும். எனக்கு எண்ணேகோல் புதூர் திட்டத்தை நிறைவேற்ற 8 மாதங்கள் போதும். தண்ணீர் கொண்டு வரப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு செய்து கொடுப்பேன். இந்த மாவட்டமே மாறப் போகிறது. பாலக்கோடு மிக செழிப்பான விவசாயம் சார்ந்த பகுதியாக இருக்கும். தமிழ்நாட்டிலேயே இது மாதிரியான வளர்ச்சி எங்கும் இல்லாத அளவிற்கு செய்யப் போகிறோம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது சாலையில்லாத மலை கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட 12000 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரி மாவட்டத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன். இதைப் பற்றி எங்கும் நான் பேசவில்லை. வளர்ச்சிக்கான திட்டத்தை மட்டும் பேசி இருக்கேன். அதேபோல் கே.பி.அன்பழகனை தனிப்பட்ட முறையில் எங்கு விமர்சனம் அடையவில்லை. வளர்ச்சி வேண்டும் அடுத்த தலைமுறைக்கு வளர்ச்சிகரமான பாலகோடு ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா திட்டங்களையும் செய்து தருமபுரி மாவட்டம் விவசாய மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக உருவாக்க போகிறேன் என தெரிவித்தார்.1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- br alone and be happy 😊1
- தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது சட்டமன்ற தேர்தல் பரப்புரை.* கல்வராயன் மலைப்பகுதியில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.* ஏப்.23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும். இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது.திரைப்படம், டி.வி., ரேடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் தேர்தல் பரப்புரை கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்னை தொடர்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- வீரசைவ - லிங்காயத் மகாசபையின் தலைவரும், கர்நாடக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான திரு. ஈஸ்வர் காண்ட்ரே கிருஷ்ணகிரி நகருக்கு வந்ததையடுத்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு உள்ளிட்ட பலர் பங்கேற்பு1
- ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமிக்கு, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் வாக்கு சேகரித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.குப்புசாமி அவர்களை ஆதரித்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு மத்தியில் முதலமைச்சர் திமுக ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் அவரைப் போல கர்நாடகாவிலும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் குப்புசாமிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் அதனால் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் ஒய் பிரகாஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரகு, திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நகர செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்ந்த ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1