Shuru
Apke Nagar Ki App…
சைபர் கிரைம் எச்சரிக்கை அறிவிப்பு நாமக்கல் மாவட்டம் மக்களே முன் பின் தெரியாத யாருக்கும் பணம் அனுப்பாதீர்கள் ஓடிபி நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் விளம்பரத்தின் மூலம் பரிசுகள் கிடைக்கும் என்று எஸ்எம்எஸ் வந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள் மானியத்துடன் லோன் தருவதாகவும் வீட்டில் இருந்த அதிக லாபம் தருவதாகவும் கூறி எதிலும் முதலீடு செய்யாதீர்கள் மோசடி அதிகமாக நடைபெற்று வருகின்றன சந்தேகம் ஏற்பட்டால் உதவி எண் 1930 தொடர்பு கொள்ளுங்கள்
கணேஷ் G
சைபர் கிரைம் எச்சரிக்கை அறிவிப்பு நாமக்கல் மாவட்டம் மக்களே முன் பின் தெரியாத யாருக்கும் பணம் அனுப்பாதீர்கள் ஓடிபி நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் விளம்பரத்தின் மூலம் பரிசுகள் கிடைக்கும் என்று எஸ்எம்எஸ் வந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள் மானியத்துடன் லோன் தருவதாகவும் வீட்டில் இருந்த அதிக லாபம் தருவதாகவும் கூறி எதிலும் முதலீடு செய்யாதீர்கள் மோசடி அதிகமாக நடைபெற்று வருகின்றன சந்தேகம் ஏற்பட்டால் உதவி எண் 1930 தொடர்பு கொள்ளுங்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- *குளித்தலை அருகே மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழா முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் நாள் நிகிழ்ச்சியான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேரோடும் நான்கு முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் வாழைப்பழம் கொண்டு அபிஷேகம் செய்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தருமபுரியில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டத்சத்து சிறுதானிய திருவிழா, கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வேளான்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி தருமபுரியில் வேளான்மை துறை இணை இயக்குனர் மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகை கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் இக்கண்காட்சியில் நெல், ராகி, தினை, கம்பு கருப்பு கவுனி அரிசி வகைகள் விதை ரகங்கள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அந்த கால மனிதர்கள் சிறுதானிய உணவு வகைகளையே சாப்பிட்டதால் நீண்ட ஆயில்யுடன் வாழ்ந்தனர் ஆனால் இக்கால இளைஞர்கள், குழந்தைகள் நவீன செயற்கை உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருகிறது ஆகையால் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக வாழவேண்டும் என கேட்டுக்கொண்டார் பின்னர் சிறுதானிய உணவு பற்றிய விவரங்களையும், பலன்களையும் வேளான்மை துறை அதிகாரிகள் மக்களுக்கு எடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர் மேலும் துனைவேளாம்மை இயக்குனர் ரத்தினம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திம்மா உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள் விவசாபிகள் பங்கேற்றனர்1
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.1
- அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.1