logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆண்டிப்பட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் காவல்துறையினர் ஊர்வலம் - தேர்தல் பாதுகாப்பு தீவிரம்.. தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் சி.ஆர்.பி.எப். துணை ராணுவப் படையினர் ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்தனர். இவர்களுக்குத் தேர்தல் கால பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அச்சமின்றித் தங்களது வாக்கினைப் பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில், ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. சக்கம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம், ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கொண்டமநாயக்கன்பட்டி வரை நீண்டது. நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி துணை ராணுவப் படையினர் கம்பீரமாக அணிவகுத்துச் செல்ல, அவர்களுடன் ஆயுதப்படை காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து சென்றனர். இந்த ஊர்வலமானது ஆண்டிப்பட்டி பழைய பேருந்து நிலையம், தேனி சாலை, மதுரை சாலை மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியாகச் சென்று பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சென்றது.

17 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
17 hrs ago

ஆண்டிப்பட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் காவல்துறையினர் ஊர்வலம் - தேர்தல் பாதுகாப்பு தீவிரம்.. தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் சி.ஆர்.பி.எப். துணை ராணுவப் படையினர் ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்தனர். இவர்களுக்குத் தேர்தல் கால பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அச்சமின்றித் தங்களது வாக்கினைப் பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில், ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. சக்கம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம், ஆண்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கொண்டமநாயக்கன்பட்டி வரை நீண்டது. நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி துணை ராணுவப் படையினர் கம்பீரமாக அணிவகுத்துச் செல்ல, அவர்களுடன் ஆயுதப்படை காவல்துறையினர், உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து சென்றனர். இந்த ஊர்வலமானது ஆண்டிப்பட்டி பழைய பேருந்து நிலையம், தேனி சாலை, மதுரை சாலை மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி வழியாகச் சென்று பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சென்றது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும் படை மற்றும்
    1
    திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பறக்கும் படை மற்றும்
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • ஐ லவ் யூ டி திவ்யா #vlog #food #funny #duet #backgroundmusic #reelremix #popularsong #melodiousvoice
    1
    ஐ லவ் யூ டி திவ்யா #vlog #food #funny #duet #backgroundmusic #reelremix #popularsong #melodiousvoice
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • *சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்* மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிருக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    4
    *சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து  - 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்*
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது.
குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது. 
கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிருக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்  பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
    user_Karthik M S
    Karthik M S
    மதுரை தெற்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது இந்த நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 "தேர்தல் பறக்கும் படை வாகனம்" தொகுதிவாரியாக புறப்பட்டது. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த வாகனங்கள் அந்தந்த தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது
    1
    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது
இந்த நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, 
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 12 என்ற அடிப்படையில் 48 "தேர்தல் பறக்கும் படை வாகனம்" தொகுதிவாரியாக புறப்பட்டது.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பறக்கும் படை வாகனங்களை  கொடியசைத்து துவக்கி வைத்தார்
இந்த வாகனங்கள் அந்தந்த தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடைபெற்றது. காமராசர் சிலையிலிருந்து மாநகராட்சி வரை, அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன முறையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    1
    திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடைபெற்றது. காமராசர் சிலையிலிருந்து மாநகராட்சி வரை, அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன முறையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருச்சி மாநகர் முழுவதும் திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சி மாநகர் முழுவதும்  திமுகவினரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் முசிறி சட்டமன்ற தொகுதியில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என திமுக சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் முதன்மை செயலாளர் கே.என் நேரு ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.