Shuru
Apke Nagar Ki App…
நாகையில் ரமலான் நோன்பு ஆரம்பமானது வேலூரில் நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததையொட்டி ஜமாத்தார்கள் தலைமை ஹாஜியிடம் தெரிவித்ததை தொடர்ந்து தலைமை ஹாஜி ரமலான் நோன்பு துவங்குவதாக அறிவித்துள்ளர் அதனையொட்டி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளம் அருகில் உள்ள காதிரியா பள்ளியில் தராவிஹ் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர கலந்து கொண்டு தொழுகை நடத்தி நோன்பினை துவங்கினர். இன்று அதிகாலை முதல் நோன்பு இருந்து மாலை நோன்பு திறக்க உள்ளனர். நாகர் ஆண்டவர் தர்கா செய்யது பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.
Chakravarthy
நாகையில் ரமலான் நோன்பு ஆரம்பமானது வேலூரில் நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததையொட்டி ஜமாத்தார்கள் தலைமை ஹாஜியிடம் தெரிவித்ததை தொடர்ந்து தலைமை ஹாஜி ரமலான் நோன்பு துவங்குவதாக அறிவித்துள்ளர் அதனையொட்டி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளம் அருகில் உள்ள காதிரியா பள்ளியில் தராவிஹ் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர கலந்து கொண்டு தொழுகை நடத்தி நோன்பினை துவங்கினர். இன்று அதிகாலை முதல் நோன்பு இருந்து மாலை நோன்பு திறக்க உள்ளனர். நாகர் ஆண்டவர் தர்கா செய்யது பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.
More news from Tamil Nadu and nearby areas
- வேலூரில் நேற்று மாலை ரமலான் பிறை தெரிந்ததையொட்டி ஜமாத்தார்கள் தலைமை ஹாஜியிடம் தெரிவித்ததை தொடர்ந்து தலைமை ஹாஜி ரமலான் நோன்பு துவங்குவதாக அறிவித்துள்ளர் அதனையொட்டி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளம் அருகில் உள்ள காதிரியா பள்ளியில் தராவிஹ் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர கலந்து கொண்டு தொழுகை நடத்தி நோன்பினை துவங்கினர். இன்று அதிகாலை முதல் நோன்பு இருந்து மாலை நோன்பு திறக்க உள்ளனர். நாகர் ஆண்டவர் தர்கா செய்யது பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது.1
- 18.02.2026 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்... நாகை மாவட்டம் திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் திருக்குவளை கல்வி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் மலர்வண்ணன், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் உமா, முதன்மை மருத்துவ அலுவலர் சசிக்குமார் மற்றும் மருத்துவர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.1
- பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு அப்துல் கலாம் நகரில் உள்ள, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை பள்ளிவாசலில், இன்று பிப்ரவரி ( 18) ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு இரவு தராவீஹ் தொழுகை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த கிளைத் தலைவர் பாரூக் சிறப்பு பயான் ஆற்றினார். இதில் ஏராளமானோர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காம் நாளாக கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் இரண்டு வாரங்களாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ள ரூபாய் 57.7 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் நான்காம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பைட்: 1 அனிதாலெட்சுமி பைட்: 2 ஸ்ரீனிவாசன்1
- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா வேங்கூர் ஊராட்சி கிழமுறுக்கூர் பகுதியில் தார் சாலை மற்றும் பேருந்து நிழல்குடை அமைத்து தர வேண்டி1
- இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின் போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும்,சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், வயலோகம், பரம்பூர், பெருமநாடு,, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை. உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் திறளான முஸ்லீம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்1
- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ,தாலுக்கா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த அஸ்வின் பவானி தாய்-தந்தை இறந்துவிட்டதால் ஆதரவின்றி தவிக்கும் அண்ணன்-தங்கை அரசு உதவ கோரிக்கை வைத்தனர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் திப்பரசன்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் விவசாய தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 17) என்ற மகனும், பவானி (14) என்ற மகளும் உள்ளனர். இதில் அஸ்வின் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பும், பவானி பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். விஸ்வநாதன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந் துவிட்டதால் அலமேலு கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து கவனித்து வந்தார். இந்தநிலையில் அலுமேலுவுக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அலுமேலுவுக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்தது தெரியவந்தது. பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை | அரசு மருத்துவ கல்லூரி மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அல மேலு பரிதாபமாக உயிரிழந்தார். தாய்-தந்தை இருவருமே உயிரிழந்துவிட்டதால் ஏழ்மை நிலையில் உள்ள அஸ்வின், பவானி ஆகியோர் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். உறவினர்களும் மும்பையில் இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தாய்-தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் அண்ணன்-தங்கைக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் திருவெண்ணெய்நல்லூரில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் இணைந்து ஒரு மாதத்திற்கான காய்கறி மளிகை பொருள் அரிசி எண்ணெய் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை காவல்துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு சென்று கொடுத்தனர் அப்போது இன்ஸ்பெக்டர் அழகிரி அவர்கள் காவல்துறை சார்பில் நீங்கள் படிப்பதற்கான முழு செலவையும் திருமணத்திற்கான செலவையும் காவல்துறை சார்பில் எங்களால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று உறுதி அளித்தார்1
- ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வட்ட செயலாளர் அழகுவேல் தலைமையில் சென்னையில் மாற்று திறனாளிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் எதிராக 35 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.1