Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல், முத்தழகுப்பட்டி செபஸ்தியார் கோவில் அருகே பல்வேறு கட்சியைச் சார்ந்த 250 பேர் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
Subramani Press Reporter Subramani
திண்டுக்கல், முத்தழகுப்பட்டி செபஸ்தியார் கோவில் அருகே பல்வேறு கட்சியைச் சார்ந்த 250 பேர் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. விழாவின் பின்னணி இந்த பிரம்மோற்சவ விழா கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்னதாகக் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை நேரங்களில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் எனப் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, சீதா பிராட்டி மற்றும் லெட்சுமணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் பெரிய தேரில் எழுந்தருளினர். "கோவிந்தா" கோஷங்கள் முழங்க, திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேவகோட்டையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், நிலையை வந்தடைந்தது. விழாவில் தேவகோட்டை நகர் பகுதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- தமிழகத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மானாமதுரையில் நேற்று (04.04.2026) விரிவான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டாட்சியர் பங்கேற்பு: மானாமதுரை பழைய யூனியன் அலுவலகத்தில் (விழுதுகள்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானாமதுரை வட்டாட்சியர் கிருஷ்ண குமார் தொடங்கி வைத்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வுகள்: * சைகை மொழி உறுதிமொழி: செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் இணைந்து சைகை மொழியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். * முதல்முறை வாக்காளர்களுக்கு கௌரவம்: மாற்றுத்திறனாளிகளில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது. * விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோலாட்டம், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. * வாகனப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். * கையெழுத்து இயக்கம்: தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு "நிச்சயம் வாக்களிப்போம்" என உறுதி பூண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (DDAWO), வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.2
- Post by பெரியசாமி1
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் பாலகணபதி, தனது அறிமுக தேர்தல் பரப்புரையை மானாமதுரையில் நேற்று தொடங்கினார். அண்ணா சிலைக்கு மரியாதை பரப்புரையை முன்னிட்டு, மானாமதுரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பொன் பாலகணபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி ஆரம்பித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு இந்நிகழ்வின் போது வேட்பாளருடன் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்: * அஇஅதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். * நகரச் செயலாளர்கள். * தேசிய ஜனநாயக கூட்டணியின் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். இந்த அறிமுக பரப்புரையின் போது, கூட்டணி கட்சியினர் உற்சாகமாகப் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர். மானாமதுரை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பரப்புரை, அப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.1
- தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் ஏப்ரல் 6 என்பதால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்... இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தராஜ், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது... இதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம், வேட்பாளர் கோவிந்தராஜ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்... இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்கள் வெற்றி பெற்றால் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டை இடையே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்” என தெரிவித்தார்...1