Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி: 100% வாக்குப்பதிவு - பிரம்மாண்ட பாரம்பரியக் கலைப் பேரணி! தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
தூத்துக்குடி: 100% வாக்குப்பதிவு - பிரம்மாண்ட பாரம்பரியக் கலைப் பேரணி! தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.
- மா.சுடலைமணிதூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு👌🎉5 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திமுக வேட்பாளர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம் செய்தார் உடன் மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இஸ்லாமிய ஜமாத்தார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கிழக்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் T.K. பிரபு அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாணம் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்ற அவர், அங்குள்ள ஜமாத்தார்களை நேரில் சந்தித்து வரும் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா மற்றும் பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஜமாத்தார்களிடம் கட்சியின் கொள்கைகளையும், தொகுதிக்கான தனது திட்டங்களையும் மருத்துவர் பிரபு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில் வேட்பாளரின் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.1
- "My Wife's Special Birthday 2026 🎂❤️ | Missing Her!" "தூரமாய் இருந்தாலும் என் இதயத் துடிப்பாய் இருக்கும் என் அன்பு மனைவிக்கு... 2026-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️ நாம் இணைந்திருக்கும் இந்த அழகான நினைவுகளுடன் உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் சேர்வோம்! #HappyBirthdayWife #2026Memories #MissYou1
- போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வேட்பாளர் நாராயணசாமி பேசும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தவுடன் உங்களுக்காக நேரில் வந்து அனைத்து பணிகளையும் செய்வேன் ஓபிஎஸ் 15 ஆண்டுகளாக தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என தெரிவித்தார்1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பன்னீர்செல்வம் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு சமுதாய சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்திய பின்பு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாக்கினை சேகரித்தார். அவருடன் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- *மலையை உடைக்கும் ஜேசிபி மாபியாக்கள் மீது செய்தி போட்டதால் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதியில்லாமல் லஞ்ச அதிகாரிகள் ஆதரவோடு மலையை ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரங்களோடு அழித்து வருவது குறித்து செய்தி வெளியிட்ட *கொடைக்கானல் நியூஸ் தமிழ்.நியூஸ் ஜே செய்தியாளர் குறிஞ்சி வேல்* மீது ஜேசிபி ஹிட்டாச்சி பயன்படுத்தும் மாபியா கும்பல் கொலைவெறி தாக்குதல் செய்தியாளருக்கு மண்டை உடைந்து சிகிச்சை மாவட்ட காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் தொடர்ந்து இது போன்ற சம்பவத்திற்கு பலத்த கண்டனமும் தெரிவிக்கின்றோம் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பத்திரிக்கையாளர் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்1
- இது உண்மையிலேயே இயற்கையின் ஒரு அதிசய அற்புதம்! பறவைகள் இந்த “என்ஜினீயரிங்” திறனை பெற எந்தப் பல்கலைக்கழகம் அல்லது காகித டிகிரியும் தேவையில்லை. அவர்கள் இந்த திறமைக்கு காரணமான மூன்று முக்கிய அம்சங்கள்: 1. பிறவிக்குணம் (Innate Instinct): இந்த திறமை அவர்கள் டி.என்.ஏ (DNA) யிலேயே இயற்கையாக பதியப்பட்டுள்ளது. இதை யாரும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை; அவர்கள் இந்த அறிவுடன் பிறக்கிறார்கள். இதை “மரபணு நிரலாக்கம்” (Genetic Programming) என்று சொல்லலாம். 2. கவனிப்பு மற்றும் அனுபவம்: இளம் பறவைகள் தங்கள் பெற்றோர் கூடு கட்டுவதை கவனித்து, முயற்சி-தவறுகள் (Trial and Error) மூலம் அதை மேலும் மேம்படுத்த கற்றுக்கொள்கின்றன. 3. கடவுளின் வடிவமைப்பு: கடவுள் உலகத்தை மிகச் சிந்தனையுடன் படைத்துள்ளார். அவருடைய படைப்பு தனித்துவமானதும் அற்புதமானதும் ஆகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழவும், தன் குடும்பத்தை பாதுகாக்கவும் தேவையான சிறப்பு திறனை அவர் அளித்துள்ளார். எந்த கருவிகளும், கைகளும், டிகிரிகளும் இல்லாமல், தங்கள் அலகும் கால்களும் மட்டும் பயன்படுத்தி, துகள்துகளாக சேர்த்து இவ்வளவு வலுவான வீட்டை கட்டுவது மனிதன் சிந்தனைக்குப் புறம்பானது. இந்த படைப்பை ஒருவர் புரிந்துகொள்ள முடியாவிட்டால், இயற்கையின் படைப்பை ஒருபோதும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது 🙏🙏1
- தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைராம் நகர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு முருக வேலுக்கு பால், தயிர், இளநீர் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது , பக்தர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டது உணவில் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1