Shuru
Apke Nagar Ki App…
தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்
Arokiaraj.J
தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தந்தை பெரியாரின் 148 பிறந்தநாள் விழா அமைச்சர் பர்வேஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்2
- தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அவரது 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொறுப்பாளர்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது .இதனை அடுத்து அரிமளம் தெப்ப குளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிமளம் பசுமை மீட்பு குழு வரத்து வாரிகளை தூய்மை செய்ததன் பேரில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்1
- காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணியில் விநாயகர் சிலை கரைத்தனர் : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசலில் பருப்பு ஊரணி விநாயகர் சிலை கரைத்தனர் பெரியார் சிலையில் இருந்து விநாயகர் சிலையை டிராக்டரில் மேளம் தாளத்துடன் ஊர்வலமாக வந்து கழனிவாசன் பருப்பு ஊரணியில் கரைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுபிடித்தனர்.2
- சிங்கம்புணரியில் 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் விமர்சையாக நடந்தது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இந்து முன்னனி நடத்திய 32-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொழிலதிபர் ஆர்.எம்.எஸ்.சரவணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 9 முதல் 16 அடி உயரமுள்ள 46 விநாயகர் சிலைகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தெப்பக்குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. பாதுகாப்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றினர்.1
- மணப்பாறையில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் விழா தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் எம்எல்ஏ அவர்கள், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அணி அமைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- பிரதமர் மோடியின் பிறந்தநாள்: மணப்பாறையில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறை யில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, மணப்பாறை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. மணப்பாறை நகரப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக, அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படடு, அவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. தனைத் தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பாஜகவினர் இனிப்புகளை வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர். மணப்பாறை நகரத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் லலிதா அழகப்பன், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், நகரச் செயலாளர்கள் புவனேஸ்வரி, ஜீவானந்தம், ஆரோக்கியசாமி, நகர செயற்குழு உறுப்பினர்கள் தங்கபாண்டியன், பெஸ்ட் ராமசாமி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நகரத் தலைவர் சூரிய பிரகாஷ் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.3
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் நடைபெற்றது. பொன்னமராவதி விநாயகர் சதுர்த்தி விழாக்குழு சார்பில் சிவன் கோயில் திடலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன் வாத்தியங்கள் முழங்க தொடங்கிய ஊர்வலத்தில் விழாக்குழு விநாயகருடன், நகரில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாட்டுக்கல், வலையபட்டி, புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக வந்து அமரகண்டான் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்இந்நிகழ்வில் கலந்த கொண்டனர்.1