*சிறுநீரக நோய் தீவிரத்தைக் குறைப்பதில் நம்பிக்கையளிக்கும் புதிய 'ஆன்டிபாடி’மருந்துகள், மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் தகவல்* உலக சிறுநீரக தினம் மார்ச் 12, 2026 அன்று அனுசரிக்கப்படவிருப்பதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் சம்பத்குமார், சிறுநீரக அறுவைசிகிச்சை பிரிவின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவ நிர்வாகி கண்ணன் ஆகியோர் இது குறித்து விளக்கினர். "இந்தியாவில் சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான IgA நெஃப்ரோபதி போன்ற சிறுநீரக நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க 2025-ல் அங்கீகரிக்கப்பட்ட GLP-1 அனலாக்ஸ், மோனோக்ளோனல் ஆன்டிபாடி மற்றும் எண்டோதெலின் ரிசப்டர் அன்டகோனிஸ்டுகள் போன்ற புதிய மருந்துகள் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளன," என்று கூறினர். “இம்மருந்துகள் சிறுநீரக நோய் தீவிரமடைவதை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, நோயை முழுமையாக குணப்படுத்தும் நிலையை நோக்கி சிறுநீரக சிகிச்சை முன்னேற்றம் அடைந்து வருவதை குறிக்கின்றன. புதிய மருந்துகள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சைகள் மட்டுமின்றி, நோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் ஆபத்துகளை வகைப்படுத்துதல் போன்றவற்றால், பல நோயாளிகளுக்கு சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாப்பதும், சிறுநீரில் புரதக் கசிவை (அல்புமினூரியா) சரிசெய்வதும் சாத்தியமாகியுள்ளது. சிறுநீரக மருத்துவத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்”, என்றும் தெரிவித்தனர். டாக்டர் சம்பத்குமார் பேசுகையில், "இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் சிறுநீரகத்தின் மெல்லிய வடிகட்டும் அடுக்கான 'குளோமருலர் பேஸ்மென்ட் மெம்பிரேன்' (GBM) பாதிக்கப்படும் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, நாட்டிலேயே முதல்முறையாக எங்கள் மருத்துவமனையில் புதிய மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டது. வழக்கமான சிகிச்சைகள் பலனளிக்காமல், சிறுநீர் வெளியேறாமல் கடுமையான சிறுநீரக செயலிழப்பு நோயாளிக்கு இருந்தபோது, எக்குலிசுமாப் என்ற ஆன்டிபாடி மருந்து மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது. இரண்டு கட்ட சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் சிறுநீர் வெளியேற்றம் கணிசமாக மேம்பட்டதால், டயாலிசிஸ் சிகிச்சை அவசியத்திலிருந்து படிப்படியாக விடுபட்டார்," என்று கூறினார்.

- அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். மதுரை, மார். 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர். மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.2
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், ஜமாத்தார்கள், உலமாக்கள், இஸ்லாமிய பெருமக்கள், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மணலூர் ஜெயராஜ், சொக்கலிங்கபுரம் சசிகுமார் மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் ரபீக் மைதீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபிக், நகரச் செயலாளர் சக்திவேல் பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணை தலைவர் ஜாகிர் உசேன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டி, தியாகு என்ற முத்துக்குமார் பேரூராட்சி பகுதி முக்கிய நிர்வாகிகள் பஷீர் அகமது, அலாவுதீன், சையது அல்தாப்,சேடப்பட்டி முத்து மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னணி தொண்டர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.1
- *சித்தையன் கோட்டை வடக்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கேற்பு* திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நோன்பு திறந்தார். தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய பின்னர் சித்தையன் கோட்டை பகுதி பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம்களுக்கு பரிசு தொகுப்பினை வழங்கினார், இந்நிகழ்வில் உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், நகர செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் அலாப்தீன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபிக், வக்கீல் செல்ல மரைக்காயர், சேக் தாவூத், உதுமான் அலி, ரபிக் மைதீன் உட்பட திமுக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பைசூர் ரகுமான், அங்குச்சாமி, அப்துல் ரகுமான் மற்றும்சித்தையன் கோட்டை ஜமாத்தார்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..1
- திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.2
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.12 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி 2 தினங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திடக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது தந்தை கிருஷ்ணன் உயிரிழந்தநிலையில், வாரிசு சான்றுக்காக பிப்.26-ம் தேதி திடக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சுதாகரை (47) அணுகினார். சான்று பெற்று தர ரூ.5,000 தருமாறு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜா, இதுகுறித்து சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸாரின் ஆலோசனைபடி, ரசாயன தடவிய பணத்தை நீதிமன்றம் அருகே உள்ள பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சுதாகரிடம் ராஜா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் சுதாகரை கைது செய்தனர்.1