Shuru
Apke Nagar Ki App…
"நானோ" தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த சர்வதேச கருத்தரங்கம். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
Devakottaigani news
"நானோ" தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த சர்வதேச கருத்தரங்கம். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி தங்களது புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் நவீன தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைவதை தடுத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நானோ தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் குறித்து இந்த சர்வதேச மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, ஆகாஷின் உறவினர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல சமுதாய அமைப்புகள் இணைந்து மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தமிழின வேந்தர் பி. ஜான் பாண்டியன் போராட்டக் களத்திற்குச் சென்று தனது ஆதரவையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு நீடித்து வருகிறது.1
- திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.2
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே.12 முதல் 19 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ராட்டின ஏலத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க வினர் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலகத்தை போலீஸ் அனுமதி இன்றி 2 தினங்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட சிலர் மீது வீரபாண்டி காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.1
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இஸ்லாமிய பெருமக்கள் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தேனி அருகே சமதர்மபுரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-ம் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது. தற்பொழுது நெற்பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்த நிலையில் அப்பகுதிகளில் நெல் அறுவடைப்பணி தீவிரமாக துவங்கி உள்ளது. தற்பொழுது ஏக்கருக்கு 35 முதல் 38 வரையிலான நெல் மூட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் இன்று மத்திய அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்காததை கண்டித்தும், சிலிண்டர் விலைவாசியை உயர்வதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்1
- தேனி மாவட்டம் தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது . தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்று வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1