அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். மதுரை, மார். 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர். மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சிபிஎம் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம். மதுரை, மார். 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு சமையல் எரிவாயு விநியோக கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை ஜீவா நகர் முதல் தெரு சந்திப்பில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஏ. வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கணேசன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து பகுதிக்குழு உறுப்பினர் எம். பாரதி, பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பாலசுப்பிரமணியம், டி. செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் நிறைவு உரையாற்றினார். இதில்
மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி. குமரவேல், எம்.சி., எம். பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் : அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த போர் நடவடிக்கைகள் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதால் பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்தியாவும் பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றது. எனவே மேற்காசியாவில் ஏற்படும் போர் நிலைமைகள் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதனால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகியுள்ளன எனக் கூறினர். மேலும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகள் உலக நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், இத்தகைய போர் நடவடிக்கைகள் மனிதகுலத்துக்கு எதிரானவை என்றும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தனர். முன்னதாக ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, ஆகாஷின் உறவினர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல சமுதாய அமைப்புகள் இணைந்து மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தமிழின வேந்தர் பி. ஜான் பாண்டியன் போராட்டக் களத்திற்குச் சென்று தனது ஆதரவையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு நீடித்து வருகிறது.1
- பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-ம் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது. தற்பொழுது நெற்பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்த நிலையில் அப்பகுதிகளில் நெல் அறுவடைப்பணி தீவிரமாக துவங்கி உள்ளது. தற்பொழுது ஏக்கருக்கு 35 முதல் 38 வரையிலான நெல் மூட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- தேனி அருகே சமதர்மபுரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இஸ்லாமிய பெருமக்கள் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை வாசலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கோட்டை காலபைரவருக்கு இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஏராளமான பக்தர்கள் அழகு குத்தி காவடி எடுத்து பெரியகுளம் நகர் வழியாக ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.1
- தேனி மாவட்டம் தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது . தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்று வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில் இன்று மத்திய அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்காததை கண்டித்தும், சிலிண்டர் விலைவாசியை உயர்வதை கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்1