Shuru
Apke Nagar Ki App…
Salem news
Nan unagalota friend Nan unagalota friend
Salem news
More news from தமிழ்நாடு and nearby areas
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.2
- Post by 10491
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திர பதிவிற்க்கு, ஒரு இலட்சம் கேட்பதாக, தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றச்சாட்டு. பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திரபதிவிற்க்கு, ஒரு லட்சம் கொடுத்தால்தான் பத்திரப் பதிவு செய்வதாக தர்மபுரி மேற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பொறுப்பேற்ற சக்திவேல், மூன்று மாதங்களே ஆன நிலையில் எந்த ஒரு பத்திரப்பதிவு என்றாலும், பணம் கொடுத்தால்தான் பத்திர பதிவு செய்ய முடியும், ஏன் எதற்கு என கேட்டாள் மேல் இடத்தில் குடுக்கனும் என்பதாகவும், நாள்தோறும் இந்த அலுவகத்தில் சுமார் குறைந்தது 50 (டோக்கன்) பத்திரம் பதிவு செய்யப்படுகிறது, அப்படியென்றால் எவ்வளவு லஞ்சம் எடுத்துச்செல்வார், இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். மேலும் இலஞ்சம் ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என விவசாய பொதுமக்கள் புலம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சார்பதிவாளர் சக்திவேலுக்கு உறுதுணையாக அலுவலக உதவியாளர் முருகம்மாள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.1
- மிட்டபள்ளி கிராமத்தில் மாமனார் மருமகன் அடிதடி பிரச்சனை சம்மதமாக மருமகன் சிறையில் அடைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(43) அளித்த புகாரியில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு திருமணமாகி நந்தினி புவனேஸ்வரி குணவதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஹரிஷ் என்ற ஒரு மகன் உள்ளதாகவும் இந்த நிலையில் தனது பெரிய மகளான நந்தினி என்பவருக்கு தனது அக்கா காஞ்சனா என்பவரது மகன் தியாகராஜன் என்பவருக்கு கடந்த 11 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்ததாகவும் கணவன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் சண்டை வந்து இதில் மகள் நந்தினியை அடித்து விட்டதாகவும் தந்தை வீட்டிற்கு மகள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் 28.12.2025 காலை 8 மணி அளவில் மனைவி நந்தினி தந்தை மகாலிங்கம் என்பவரது வீட்டின் முன்பு வந்த தியாகராஜன் ஆபாச வார்த்தைகள் திட்டி கையால் மாமனார் மகாலிங்கம் என்பவரை கன்னத்தில் அடித்ததாகவும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மகாலிங்கம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் நித்தியா வழக்கு பதிவு செய்து தியாகராஜன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்1
- கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.1
- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிகடை முகத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெற்கு ஒன்றிய நகரக் கழகத்தின் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் விஜயகாந்த் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்.2
- ராயக்கோட்டை மேம்பாலம் மேல் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா பேருந்து மற்றும் கார் மோதி விபத்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது கர்நாடகா அரசு பேருந்தின் பின்பக்கம் வந்த ஷிப்ட் கார் பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காரில் பயணித்தவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் எவ்வித காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இந்த விபத்து சம்பந்தமாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் கர்நாடக பேருந்து ஓட்டுனர் ரவிகாந்த் மற்றும் கார் ஓட்டுநர் திருவண்ணாமலை பகுதி சேர்ந்த சுந்தர் இரண்டு நபர்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1