Shuru
Apke Nagar Ki App…
உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாக இருக்கும் - அமைச்சர் கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Reporter Pattukkottai
உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாக இருக்கும் - அமைச்சர் கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆண்டிபட்டியில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருதலைப்பட்சமாக அகற்றபடுவதாக பொதுமக்கள் . தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் ஒருதலைப் பட்சமாக பராபட்சமாக அகற்றப்படுவதாகவும்தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீது பொதுமக்கள் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகர்பகுதி தேர்வுநிலை பேரூராட்சியாக விளங்கி வருகிறது.மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள இந்த நகரில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதோடு இந்நகரத்தின் வழியாக செல்லும் சாலை கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்புக்கள் செய்து பயன்படுத்தி வருவதால் 100 அடியுள்ள சாலையின் அகலம் 20 அடிகள் வரை குறைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அவ்வப்போது உயிர்பலியும் ஏராளமானோர் படுகாயங்களும் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை துறையினர் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம் நிலஅளவை துறையினர் மின்துறையினர் காவல்துறையினர் ஆகியோரோடு இணைந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான ஜக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர்.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.ஒரு தலைப்பட்சமாக பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும்,பெரிய வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் ஆகியவற்றின் முன்புறம் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை என்றும்,சிறிய கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் கடைகள் ஆகியவையே ஆற்றப்படுவதாகவும் புகார் கூறும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுவரை நான்கு முறை ஆண்டிபட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் முழுமையாக ஆக்கிரமப்புக்கள் அகற்றப்படாமல் கண் துடைப்பாகவே இப்பணிகள் நடைபெற்றதாகவும்,இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதின் நோக்கம் நிறைவேறாமல் வழக்கம்போல் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாகவும் எனவே முறையாக முழுமையாக பாரபட்சமில்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.4
- Post by Mr Mr. Gandhi1
- தேனி அருகே கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குடியரசு தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி,வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,தேனி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாலா காமராஜ்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- Post by N balu Nbalu1
- அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉🎉1
- தேனி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- Post by Mr Mr. Gandhi1
- மாதா அமிர்தானந்த மாயி அவர்கள் ஆசிரமத்தில் நான் சந்தித்த இந்த நிகழ்ச்சி என் மனதை மாற்றியது. குறைந்த அளவான வளங்களை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.1