logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கண்களில் தெரியும் ஏழ்மை போட்டோ எடுபதற்கு தனது கிழிந்த சட்டையை மறைக்கும் போது தெரியும் வெறுமை பார்பதற்க்கு மனது ஏதோ செய்கிறது.

on 13 March
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
on 13 March

கண்களில் தெரியும் ஏழ்மை போட்டோ எடுபதற்கு தனது கிழிந்த சட்டையை மறைக்கும் போது தெரியும் வெறுமை பார்பதற்க்கு மனது ஏதோ செய்கிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *’’மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்காது…’’* *- ஆண்டிப்பட்டியில் இபிஎஸ், டிடிவி கூட்டுப் பிரச்சாரம்* தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரச்சாரம் செய்தனர் பிரச்சாரக் கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறும்போது 2002ல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் நான்கு தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி. மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநிலத் தொகுதிகளையும் உயர்த்துவதற்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்துப் பேசுகிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டனர். ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது எங்களைப் பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டிப் பார்க்கிறார். தீயசக்தி திமுகவை அப்புறப்படுத்தி, இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி உருவாக வேண்டும், அதற்கு நாம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்று பேசினார் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ’’இந்த மாவட்டத்துக்கு தனி வரலாறு உண்டு, இரண்டு முதல்வர்களை கண்ட மாவட்டம் தேனி மாவட்டம். எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டு முதல்வரானார்கள். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே எழுச்சிப் பயணத்தில் நான் உங்களை சந்தித்தேன், டி.டி.வி.தினகரன் குறிப்பிட்ட போல ஆண்டிப்பட்டி நகரமே அதிர்கிறது மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்திருக்கிறோம். தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு உங்கள் ஆரவாரமே சாட்சி. அதிமுக சாபில் கம்பம் தொகுதியில் ஜக்கையன், போடிநாயக்கனூர் தொகுதியில் வி.டி.நாராயணசாமி, ஆண்டிப்பட்டி தொகுதியில் லோகிராஜன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் நிற்கும் டாக்டர் கே.கதிர்காமுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நான்கு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்து எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்களின் ஆசியோடு தேனி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள். தேனி மாவட்டம் என்றாலே முல்லைப் பெரியாறு அணை. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்கிறேன். கடினமான தொழில். ரத்தத்தை வியர்வையாக சிந்தி உணவளிக்கும் விவசாயிகள் ஏற்றம் பெற வேண்டும் என்பதுதான் அதிமுக லட்சியம். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்குப் பிறகு அணையின் இரு கரைகளிலும் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தோம், கேரள அரசு அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி நம் அதிகாரிகள் மீது வழக்கு போட்டார்கள். இருப்பினும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச்செல்ல முடியாத அளவுக்கு தடுத்து நிறுத்தி கேரள அரசு இடையூறு செய்தது. அணையை பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், நான் கேரள முதல்வரை நேரடியாக சந்தித்துப் பேசினேன். அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைய முதல்வர் இதை கண்டுக்கொள்ளவே இல்லை. கம்யூனிஸ்ட்டோடு திமுக கூட்டணியில் உள்ளது, இதுவரை முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்று அம்மாநில முதல்வரைப் பார்க்கவில்லை, சந்தித்துப் பேசியிருந்தால் 152 அடியாக உயர்த்தியிருக்கலாம். அப்படி செய்தாரா..? விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதுதான் ஸ்டாலின் எண்ணம். ஸ்டாலின் நினைத்திருந்தால் விவசாயிகள் பிரச்னைகளை கேரள முதல்வரிடம் பேசி தீர்வு கண்டிருக்கலாம். இப்படி விவசாயிகளைப் புறக்கணித்த முதல்வர் வேண்டுமா? கேரளா அதற்கு பக்கத்தில் ஒரு அணை கட்டுவதாகக் குறிப்பிட்டனர், அதிமுக அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஸ்டாலின் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 5 மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அளவை உயர்த்தியிருக்கலாம். பென்னிகுயிக் தனது சொந்தப் பணத்தில் இந்த அணை கட்டினார், அவருக்கு அம்மா மணி மண்டபம் கட்டி கவுரவித்தார். திமுக வெளிநாட்டுக்கு போய் அங்கு சிலை திறப்பதாகச் சொல்லி, அதற்கு பணம் கட்டாமல் புறக்கணித்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு இந்தி எதிர்ப்பு, மொழிக் கொள்கை, மாநில உரிமை எல்லாமே ஞாபகம் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இந்தியை திணித்தது காங்கிரஸ். இப்போது அந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறார்கள். பச்சோந்தி கூட கொஞ்சநேரம் கழித்துத்தான் நிறம் மாறும், ஆனால் உடனுக்குடன் நிறம் மாறுவார் முதல்வர் ஸ்டாலின். கொள்கை பிடிப்புள்ள கட்சி என்கிறார் ஸ்டாலின். திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா..? ஒரே கொள்கை என்றால் எதற்காக தனித்தனி கட்சி..? இவர்களே புதுச்சேரி, கேரளாவில் எதிர்த்து நின்று போட்டி இடுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி வாக்கு கேட்கும் முதல்வர் தேவையா? இந்த மண்ணில் இருந்த ஒருவர் வேறு பக்கம் சென்றுவிட்டார். நம்மை விட்டு போய்விட்டார், எங்கிருந்தாலும் வாழ்க. நான் அவரைப்பற்றி பேசவில்லை. தமிழகத்தில் கிராமப்புறங்களில் பயிலும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, எனது ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் தான் 7.5% உள் இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு மூலம், கடந்த அதிமுக ஆட்சியில் 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். இப்படி ஒரு திட்டமாவது திமுக கொண்டுவந்ததா? திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு புது திட்டம் இருந்ததா? கொரோனா காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை; கலால் வரி, வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் கிடைக்கும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டுகாலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன; மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதேயாண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லாமல் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். தமிழ்நாட்டில் தான் பொருளாதாரம் பாதிக்காத அளவுக்கு ஆட்சி செய்தோம், 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம், அப்போது கூட கடன் வாங்கவில்லை. கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது, சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். இதன்மூலம், எப்படி தேர்வெழுதி எப்படி அடுத்த வகுப்புக்குச் செல்லப்போகிறோம்? என்று ஏக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு விடிவுகாலம் அமைந்தது. 2017ல் வறட்சி குடிக்க நீர் இல்லை, அணை வறண்டுவிட்டது, நிலத்தடி நீர் வற்றியது, அப்போது வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு. புயல் வெள்ளம் பேரிடர் டெல்டாவை புரட்டிவிட்டது, தேவையான நிவாரணம் கொடுத்தோம். பின்னர் கொரோனா. அத்தனையும் வென்றெடுத்து சிறப்பான ஆட்சி கொடுத்தோம். 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்த அரசு சிறப்பான அரசா? நம்மை கடன்காரன் ஆக்கிவிட்டார் ஸ்டாலின். வேறு என்ன சாதனை? இந்தியாவுக்கே முதன்மையான மாநிலமாம், எதில்? ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும் தான். இந்த கடனையெல்லாம் நீங்கள் தான் கட்டவேண்டும். நான் உட்பட, தினகரன் உட்பட எல்லோரையும் கடன்காரன் ஆக்கிவிட்டார். மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்குமா? இனி தமிழ்நாட்டை காப்பாற்றுவது மிகவும் கடினம். ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. இப்படி கடன் வாங்கிய அரசு தேவையா அல்லது சிறப்பாக ஆட்சி செய்த அதிமுக தேவையா? அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூடுதல் வருவாய் வருகிறது, அப்புறம் எதற்கு கடன்..? ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். தேனியில் கூட சட்டக்கல்லூரி கொடுத்தோம், புதிய மாவட்டம், தாலுகா, கோட்டம் எல்லாம் அதிமுக கொடுத்தது. திமுக கொள்ளைதான் அடித்தது. கலெக்‌ஷன் கமிஷன் கரப்ஷன் இதுதான் ஐந்தாண்டு காலம் திமுகவின் சாதனை. மக்களை சுரண்டி பணத்தை அபகரிக்கும் அரசு தேவையா? விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய். கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய். நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 500 ரூபாய். துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய். உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா? குடிநீர் இணைப்புக்கு அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 900 ரூபாயாக இருந்தது, அதனை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டனர். இது வேளாண் மக்கள் நிறைந்த பகுதி. விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன. தூர் வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. அதிமுக ஆட்சியில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ளலாம். விவசாயிகள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச, எந்நேரமும் மின் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஷிஃப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. எனது ஆட்சியில் மட்டும் சுமார் 12,100 கோடி ரூபாய் அளவுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிப்பு. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தடுக்க முடியவில்லை ஏனென்றால் திமுகவினர் துணை நிற்கிறார்கள் அதனால் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. தமிழ்நாடு காவல்துறை ஏவல்துறையாக இருக்கிறது, அதற்குக் காரணம் அரசியல் தலையீடு, சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா அறவே ஒழிக்கப்படும். 525 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அவற்றில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை, கேஸ் மானியம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, ரேஷன் கடையில் கூடுதல் சர்க்கரை கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாகச் சொல்லிக் குறைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாகச் சொல்லி உயர்த்தவில்லை. அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் மத்திய அரசு அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 150 நாட்களாக உயர்த்தப்படும் தேனி மாவட்டம் சின்னமனூரில் விவசாயிகள் பல ஆண்டுகளாக பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக மேட்டுப்பகுதிக்கு பாசனம் செய்துவந்தனர், அமைச்சர் ஒருவர் வேண்டுமென்றே ஜேசிபி வைத்து, பைப் லைன்களை எல்லாம் உடைத்துவிட்டார். விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளிடம் பேசி, ஏற்கனவே இருந்தவாறு பைப்லைன் அமைக்கத் தேவையான உதவிகள் வழங்கப்படும், ஏற்கனவே உள்ள பாசன பரப்பு மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் வாழை, திராட்சை அதிகமாகப் பயிரிடுகிறார்கள், அதை மதிப்புக்கூட்டுப் பொருளாக்கி, அதை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின், தேனிக்கு கொடுத்த திட்டங்களைச் சொல்கிறேன்,. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியார் அணை அளவு உயர்த்தப்பட்டது, பென்னிகுயிக் மணிமண்டபம் அமைப்பு, 4000 வீடுகள், போடியில் தொழில் கல்லூரி, வீரபாண்டி கலை கல்லூரி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், பெரியகுளம் வீரபாண்டியில் நர்சிங் கல்லூரி, 18ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கம்பம் உள்ளிட்ட பல நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், வீரபாண்டி சிப்காட் அமைப்பு, தொண்டமான் அணை திட்டம் 110ல் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் வெளியிடப்பட்டது, திமுக ஆட்சி கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சி வந்ததும் திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 297 அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம், அதில் சிலவற்றைச் சொல்கிறேன். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம், வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மீனவர்களுக்கும் கான்கிரீட் வீடு. கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயமாக தொழில் தொடங்கினால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தேவையான வட்டியில்லா கடன் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் இவையெல்லாம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வீரர்களுக்கு காப்பீடு செய்து பிரீமியத்தை அரசே செலுத்தும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். அதிமுக வின்னிங், நல்லாட்சி கம்மிங்’’ என்று முடித்தார்.
    1
    *’’மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்காது…’’*
*-	ஆண்டிப்பட்டியில் இபிஎஸ், டிடிவி கூட்டுப் பிரச்சாரம்*
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரச்சாரம் செய்தனர்
பிரச்சாரக் கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறும்போது 
2002ல் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் நான்கு தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி. 
மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநிலத் தொகுதிகளையும் உயர்த்துவதற்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்துப் பேசுகிறார். 
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டனர். 
ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது எங்களைப் பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டிப் பார்க்கிறார். 
தீயசக்தி திமுகவை அப்புறப்படுத்தி, இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி உருவாக வேண்டும், அதற்கு நாம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்று பேசினார் 
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில் 
’’இந்த மாவட்டத்துக்கு தனி வரலாறு உண்டு, இரண்டு முதல்வர்களை கண்ட மாவட்டம் தேனி மாவட்டம். 
எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டு முதல்வரானார்கள். 
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே எழுச்சிப் பயணத்தில் நான் உங்களை சந்தித்தேன், டி.டி.வி.தினகரன் குறிப்பிட்ட போல ஆண்டிப்பட்டி நகரமே அதிர்கிறது மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்திருக்கிறோம். 
தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு உங்கள் ஆரவாரமே சாட்சி.
அதிமுக சாபில் கம்பம் தொகுதியில் ஜக்கையன், போடிநாயக்கனூர் தொகுதியில் வி.டி.நாராயணசாமி, ஆண்டிப்பட்டி தொகுதியில் லோகிராஜன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அமமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் நிற்கும் டாக்டர் கே.கதிர்காமுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நான்கு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்து எம்ஜிஆர், அம்மா இருபெரும் தலைவர்களின் ஆசியோடு தேனி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள். 
தேனி மாவட்டம் என்றாலே முல்லைப் பெரியாறு அணை. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்கிறேன். 
கடினமான தொழில். ரத்தத்தை வியர்வையாக சிந்தி உணவளிக்கும் விவசாயிகள் ஏற்றம் பெற வேண்டும் என்பதுதான் அதிமுக லட்சியம். 
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்குப் பிறகு அணையின் இரு கரைகளிலும் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு முயற்சி எடுத்தோம், கேரள அரசு அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தி நம் அதிகாரிகள் மீது வழக்கு போட்டார்கள். 
இருப்பினும் கட்டுமானப் பொருட்களை எடுத்துச்செல்ல முடியாத அளவுக்கு தடுத்து நிறுத்தி கேரள அரசு இடையூறு செய்தது. 
அணையை பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பதால், நான் கேரள முதல்வரை நேரடியாக சந்தித்துப் பேசினேன். 
அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைய முதல்வர் இதை கண்டுக்கொள்ளவே இல்லை. 
கம்யூனிஸ்ட்டோடு திமுக கூட்டணியில் உள்ளது, இதுவரை முதல்வர் ஸ்டாலின் கேரளா சென்று அம்மாநில முதல்வரைப் பார்க்கவில்லை, சந்தித்துப் பேசியிருந்தால் 152 அடியாக உயர்த்தியிருக்கலாம். அப்படி செய்தாரா..?
விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதுதான் ஸ்டாலின் எண்ணம். ஸ்டாலின் நினைத்திருந்தால் விவசாயிகள் பிரச்னைகளை கேரள முதல்வரிடம் பேசி தீர்வு கண்டிருக்கலாம். இப்படி விவசாயிகளைப் புறக்கணித்த முதல்வர் வேண்டுமா? கேரளா அதற்கு பக்கத்தில் ஒரு அணை கட்டுவதாகக் குறிப்பிட்டனர், 
அதிமுக அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஸ்டாலின் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 
5 மாவட்ட மக்கள் மீது அக்கறை இருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அளவை உயர்த்தியிருக்கலாம். 
பென்னிகுயிக் தனது சொந்தப் பணத்தில் இந்த அணை கட்டினார், அவருக்கு அம்மா மணி மண்டபம் கட்டி கவுரவித்தார். திமுக வெளிநாட்டுக்கு போய் அங்கு சிலை திறப்பதாகச் சொல்லி, அதற்கு பணம் கட்டாமல் புறக்கணித்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். 
தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு இந்தி எதிர்ப்பு, மொழிக் கொள்கை, மாநில உரிமை எல்லாமே ஞாபகம் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. 
இந்தியை திணித்தது காங்கிரஸ். இப்போது அந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறார்கள். 
பச்சோந்தி கூட கொஞ்சநேரம் கழித்துத்தான் நிறம் மாறும், ஆனால் உடனுக்குடன் நிறம் மாறுவார் முதல்வர் ஸ்டாலின்.
கொள்கை பிடிப்புள்ள கட்சி என்கிறார் ஸ்டாலின். 
திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் ஒரே கொள்கையா..? ஒரே கொள்கை என்றால் எதற்காக தனித்தனி கட்சி..? இவர்களே புதுச்சேரி, கேரளாவில் எதிர்த்து நின்று போட்டி இடுகிறார்கள். 
தேர்தல் நேரத்தில் பொய் சொல்லி வாக்கு கேட்கும் முதல்வர் தேவையா? 
இந்த மண்ணில் இருந்த ஒருவர் வேறு பக்கம் சென்றுவிட்டார். நம்மை விட்டு போய்விட்டார், எங்கிருந்தாலும் வாழ்க. 
நான் அவரைப்பற்றி பேசவில்லை. 
தமிழகத்தில் கிராமப்புறங்களில் பயிலும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, எனது ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் தான் 7.5% உள் இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு மூலம், கடந்த அதிமுக ஆட்சியில் 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். இப்படி ஒரு திட்டமாவது திமுக கொண்டுவந்ததா? 
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு புது திட்டம் இருந்ததா?
கொரோனா காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை; கலால் வரி, வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் கிடைக்கும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. 
கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டுகாலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன; 
மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதேயாண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. 
ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லாமல் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். தமிழ்நாட்டில் தான் பொருளாதாரம் பாதிக்காத அளவுக்கு ஆட்சி செய்தோம், 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம், அப்போது கூட கடன் வாங்கவில்லை. 
கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது, சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். 
பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். இதன்மூலம், எப்படி தேர்வெழுதி எப்படி அடுத்த வகுப்புக்குச் செல்லப்போகிறோம்? என்று ஏக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு விடிவுகாலம் அமைந்தது.
2017ல் வறட்சி குடிக்க நீர் இல்லை, அணை வறண்டுவிட்டது, நிலத்தடி நீர் வற்றியது, அப்போது வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு. புயல் வெள்ளம் பேரிடர் டெல்டாவை புரட்டிவிட்டது, தேவையான நிவாரணம் கொடுத்தோம். பின்னர் கொரோனா.  அத்தனையும் வென்றெடுத்து சிறப்பான ஆட்சி கொடுத்தோம். 
73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். 
இந்த அரசு சிறப்பான அரசா? நம்மை கடன்காரன் ஆக்கிவிட்டார் ஸ்டாலின். வேறு என்ன சாதனை? 
இந்தியாவுக்கே முதன்மையான மாநிலமாம், எதில்? ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும் தான். 
இந்த கடனையெல்லாம் நீங்கள் தான் கட்டவேண்டும். நான் உட்பட, தினகரன் உட்பட எல்லோரையும் கடன்காரன் ஆக்கிவிட்டார். மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்குமா? இனி தமிழ்நாட்டை காப்பாற்றுவது மிகவும் கடினம். ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. 
இப்படி கடன் வாங்கிய அரசு தேவையா அல்லது சிறப்பாக ஆட்சி செய்த அதிமுக தேவையா? அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூடுதல் வருவாய் வருகிறது, அப்புறம் எதற்கு கடன்..? 
ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். 
தேனியில் கூட சட்டக்கல்லூரி கொடுத்தோம், புதிய மாவட்டம், தாலுகா, கோட்டம் எல்லாம் அதிமுக கொடுத்தது. திமுக கொள்ளைதான் அடித்தது. கலெக்‌ஷன் கமிஷன் கரப்ஷன் இதுதான் ஐந்தாண்டு காலம் திமுகவின் சாதனை. மக்களை சுரண்டி பணத்தை அபகரிக்கும் அரசு தேவையா?
விண்ணை முட்டும் அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய். பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய்.  இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய். கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய். நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 500 ரூபாய்.  துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய். உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. 
விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. 
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா? குடிநீர் இணைப்புக்கு அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 900 ரூபாயாக இருந்தது, அதனை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டனர். 
இது வேளாண் மக்கள் நிறைந்த பகுதி. விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன. தூர் வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. அதிமுக ஆட்சியில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகள் இலவசமாக வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ளலாம். 
விவசாயிகள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச, எந்நேரமும் மின் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஷிஃப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. எனது ஆட்சியில் மட்டும் சுமார் 12,100 கோடி ரூபாய் அளவுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிப்பு. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.  தடுக்க முடியவில்லை ஏனென்றால் திமுகவினர் துணை நிற்கிறார்கள் அதனால் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. தமிழ்நாடு காவல்துறை ஏவல்துறையாக இருக்கிறது, அதற்குக் காரணம் அரசியல் தலையீடு, சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா அறவே ஒழிக்கப்படும். 
525 வாக்குறுதிகளை கொடுத்த திமுக அவற்றில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை, கேஸ் மானியம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, ரேஷன் கடையில் கூடுதல் சர்க்கரை கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாகச் சொல்லிக் குறைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதாகச் சொல்லி உயர்த்தவில்லை. அதிமுக கொடுத்த அழுத்தத்தினால் மத்திய அரசு அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் 150 நாட்களாக உயர்த்தப்படும்
தேனி மாவட்டம் சின்னமனூரில் விவசாயிகள் பல ஆண்டுகளாக பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக மேட்டுப்பகுதிக்கு பாசனம் செய்துவந்தனர், அமைச்சர் ஒருவர் வேண்டுமென்றே ஜேசிபி வைத்து, பைப் லைன்களை எல்லாம் உடைத்துவிட்டார். விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளிடம் பேசி, ஏற்கனவே இருந்தவாறு பைப்லைன் அமைக்கத் தேவையான உதவிகள் வழங்கப்படும், ஏற்கனவே உள்ள பாசன பரப்பு மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் வாழை, திராட்சை அதிகமாகப் பயிரிடுகிறார்கள், அதை மதிப்புக்கூட்டுப் பொருளாக்கி, அதை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். 
அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின், தேனிக்கு கொடுத்த திட்டங்களைச் சொல்கிறேன்,. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியார் அணை அளவு உயர்த்தப்பட்டது, பென்னிகுயிக் மணிமண்டபம் அமைப்பு, 4000 வீடுகள், போடியில் தொழில் கல்லூரி, வீரபாண்டி கலை கல்லூரி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், பெரியகுளம் வீரபாண்டியில் நர்சிங் கல்லூரி, 18ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கம்பம் உள்ளிட்ட பல நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், வீரபாண்டி சிப்காட் அமைப்பு, தொண்டமான் அணை திட்டம் 110ல் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் வெளியிடப்பட்டது, திமுக ஆட்சி கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சி வந்ததும் திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
297 அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம், அதில் சிலவற்றைச் சொல்கிறேன். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.  தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். 
பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.  நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம், வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். 
மீனவர்களுக்கும் கான்கிரீட் வீடு. கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும்.  பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயமாக தொழில் தொடங்கினால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தேவையான வட்டியில்லா கடன் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் இவையெல்லாம் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். 
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வீரர்களுக்கு காப்பீடு செய்து பிரீமியத்தை அரசே செலுத்தும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின். அதிமுக வின்னிங், நல்லாட்சி கம்மிங்’’ என்று முடித்தார்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
    1
    வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    மணப்பாறை அருகே 
திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    1
    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை  பிரதோசத்தை முன்னிட்டு  மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
  • மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    1
    மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர்,
இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.