Shuru
Apke Nagar Ki App…
சேலம் மாவட்டம் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் தலைவாசல், கூட்டுரோட்டில் அமைந்துள் கால்நடை விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தினை இன்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி செ.கமலி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலை இயக்குநர் முனைவர் க.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உடன் இருந்தனர்.
Selva
சேலம் மாவட்டம் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் தலைவாசல், கூட்டுரோட்டில் அமைந்துள் கால்நடை விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தினை இன்று கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி செ.கமலி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலை இயக்குநர் முனைவர் க.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உடன் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்3
- அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் அம்பாளுக்கு இரண்டு லட்சம் வளையல் அலங்காரம் நாமக்கல் இராசிபுரம் நகர் பகுதியில் அமைந்துள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு நித்திய சுமங்கலி அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் அம்பாள் தரிசனத்தை பக்தர்கள் அனைவரும் அம்மன் தரிசனம் பெற்று வழிபாடுகள் செய்தனர்.1