Shuru
Apke Nagar Ki App…
சமையல்Vsகாணப்பயர்சோறு !!! இன்றைய நான் சமைத்த_சமையல் !!!_Ep-1
Maatram World news Theni
சமையல்Vsகாணப்பயர்சோறு !!! இன்றைய நான் சமைத்த_சமையல் !!!_Ep-1
More news from தமிழ்நாடு and nearby areas
- சமையல்Vsகாணப்பயர்சோறு !!! இன்றைய நான் சமைத்த_சமையல் !!!_Ep-11
- தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த கொடிய அணிவகுப்பை ஆண்டிபட்டி டிஎஸ்பி சிவசுப்பு தொடங்கி வைத்தார். சக்கம்பட்டியில் தொடங்கி ஆண்டிபட்டி நகர் வழியாக கொண்டமநாயக்கன்பட்டி வரையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கவும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணி வகுப்பு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்1
- கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்து விழும் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாகக் குளித்து வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பகப் பாதுகாப்பில் அமைந்துள்ள இந்தச் சுருளி அருவிப் பகுதி, மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தங்களது இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் எள் தீபம் ஏற்றித் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து, அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், சுருளி அருவி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், சுருளி அருவிப் பகுதி தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது. இதனால், கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிபாறை, தூவானம் அணை, வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று முதல் அனுமதி அளித்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், கோடை விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று சுருளி அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். அவர்கள் சில்லென்று ஆர்ப்பரித்து விழும் குளிர்ச்சி கொண்ட தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு, அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.1
- மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாடிப்பட்டி கோட்டைமேடு பகுதியில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்முடைகள் கரையான் அரித்தும், மழை வெயிலில் வீணாகி வருவது குறித்தும் தொடர் புகார்கள் எழுந்தன. இதையறிந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வெற்றி வேட்பாளருமான மாணிக்கம் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நெல்லை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர் இப்பகுதியில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகி வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் எனவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் அதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகரச் செயலாளர் அசோக் குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- Post by G.thangarasu1
- Post by RAJA news1
- காதல்Vsகாமம் !!! வாழ்க்கையில் எது தேவை என்று யோசித்து செயல்படவும் !!!1