logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய கிணறுகளில் மின் ஒயர் திருட்டு ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில்  மின் ஒயர்கள் திருடு போனதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு அதே ஊரில் இருப்ப சாமி கோயில் அருகே கிணறு, மோட்டார் உடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. அந்த கிணற்றில் மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் நீளமுள்ள மின் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோல் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி கிராமத்தில் உள்ள பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டாருக்கு செல்லும் 25 மீட்டர் நீளமுள்ள மின் ஒயரை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

1 day ago
user_Prabakaran Praba
Prabakaran Praba
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
1 day ago
3f143b95-0c95-47cf-aac7-d497171f1058

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய கிணறுகளில் மின் ஒயர் திருட்டு ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில்  மின் ஒயர்கள் திருடு போனதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு அதே ஊரில் இருப்ப சாமி கோயில் அருகே கிணறு, மோட்டார் உடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. அந்த கிணற்றில் மோட்டாருக்கு செல்லும் 20 மீட்டர் நீளமுள்ள மின் ஒயரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோல் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி கிராமத்தில் உள்ள பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டாருக்கு செல்லும் 25 மீட்டர் நீளமுள்ள மின் ஒயரை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse, RR AARI WORK
    1
    RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blouse,
RR AARI WORK
    user_RR AARI WORK
    RR AARI WORK
    Tailor சிவகாசி, விருதுநகர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    1
    சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையினர் இன்று மதியத்திற்கு மேல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
விருதுநகர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.சாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்வரன்(கிராம ஊராட்சி),உஷா(வட்டார ஊராட்சி) ஆகியோர் அறைகள் மற்றும் மேலாளர்,உதவியாளர்கள் ஆகிய அறைகளில் சோதனை நடத்தினார்கள்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் மகேஷ்வரனிடம் 
இருந்த ரூபாய் 3000 பணம் ரெக்க மாக கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் மகேஷ்வரன் வங்கி கணக்கிற்கு  Gpay மூலம் 4 லட்சம் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    29 min ago
  • திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.
    1
    திருச்செந்தூர் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ. 1.51 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாம்பரையில் கடம்பா குளம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு உரிமம் புதுப்பித்தல், மீன் பங்கு வைத்தல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால்துரை தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து திருச்செந்தூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேந்தராஜன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து விசாரணை. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணக்கில் வராத லஞ்ச பணமா என்று விசாரணை நடத்தினர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    1
    ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் 
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    3 hrs ago
  • வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம்
*போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். 
டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள்.
கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* .
தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய்.
போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது.
தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர்  இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது.
மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி  போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது.
இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி  முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில்  தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால்   கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன.
தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்  குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும்  என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது 

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன 
இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் 
பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • இரண்டாவது நாளாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு பூஜை ஊஞ்சல் சேவை பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மட்டும் பௌர்ணமி முன்னிட்டு ராதே கிருஷ்ணன் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது அதன் பின்பு தாயார் ஊஞ்சல் சேவை மற்றும் கிருஷ்ணன் ராதே சுவாமி வீதி உலா நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது இந்த பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக கிருஷ்ணன் மற்றும் ராதே சுவாமிக்கு வண்ண பட்டுடுத்தி ஆவணங்கள் மற்றும் சுவாமிக்கு கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீமத் பாகவதம், நாரத மகரிஷி சரித்திரம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு கேட்டனர் அதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ராதே கிருஷ்ணசுவாமிக்கு வண்ண பட்டாடை ஆவணங்களால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தாயார் ஊஞ்சல் சேவை நடைபெற்றனர் இந்த ஊஞ்சல் சேவையில் சுவாமிக்கு பல்வேறு மலர்கள் தூவி சிறப்பு பூஜை மற்றும் மகா தீபா நிகழ் பெற்றது அதனை தொடர்ந்து ராதே கிருஷ்ணன் சுவாமி பல்லாக்கில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகளான தெற்கு பிரகாரம் வடக்க கிரகாரம் சங்கூரிடம் பெருமாள் கோவில் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா என மந்திரங்களை ஒழித்த படி வீதி உலாவில் கலந்து கொண்டனர் அதன் பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரார்த்தனை மையம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது
    1
    இரண்டாவது நாளாக ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு பூஜை ஊஞ்சல் சேவை
பெரியகுளத்தில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மட்டும் பௌர்ணமி முன்னிட்டு ராதே கிருஷ்ணன் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது
அதன் பின்பு தாயார் ஊஞ்சல் சேவை மற்றும் கிருஷ்ணன் ராதே சுவாமி வீதி உலா நடைபெற்றது
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது
இந்த பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக கிருஷ்ணன் மற்றும் ராதே சுவாமிக்கு வண்ண பட்டுடுத்தி ஆவணங்கள் மற்றும் சுவாமிக்கு கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றனர்
அதனைத் தொடர்ந்து  ஸ்ரீமத் பாகவதம்,  நாரத மகரிஷி சரித்திரம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு கேட்டனர் 
அதனைத் தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி இரண்டாவது நாள் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  ராதே கிருஷ்ணசுவாமிக்கு வண்ண பட்டாடை ஆவணங்களால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தாயார் ஊஞ்சல் சேவை நடைபெற்றனர் இந்த ஊஞ்சல் சேவையில் சுவாமிக்கு பல்வேறு மலர்கள் தூவி சிறப்பு பூஜை மற்றும் மகா தீபா நிகழ் பெற்றது அதனை தொடர்ந்து ராதே கிருஷ்ணன் சுவாமி பல்லாக்கில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகளான தெற்கு பிரகாரம் வடக்க கிரகாரம் சங்கூரிடம் பெருமாள் கோவில் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா என மந்திரங்களை ஒழித்த படி வீதி உலாவில் கலந்து கொண்டனர்
அதன் பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரார்த்தனை மையம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    28 min ago
  • அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    அருப்புக்கோட்டை இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதாகவும், அந்த வழியாக செல்லும் பெண்களை சிலர் கிண்டல் செய்வதாகவும் புகார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 
அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். 
இந்தப் பள்ளியின் ஒரு கட்டிடத்தை அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். 
இந்நிலையில் இந்த பள்ளி முன்பு உள்ள காலி இடத்தில் தேவையற்ற சரக்கு வாகனங்கள் டூரிஸ்ட் வேன்கள் போன்ற வாகனங்களை நிறுத்துவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் அத்துமீறி இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதாகவும் மேலும் அங்கு சிலர் பெண்களை கேலி செய்வதாகவும் அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். 
மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி முன்பு அதுவும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கியமான பகுதியில் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இது போன்ற வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 
இந்து நாடார் நடுநிலை பள்ளி முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சரக்கு வாகனங்களை தேவையில்லாத வகையில் நிறுத்துகின்றனர். மேலும் இங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு இருக்கும் சிலர் இவ்வழியாக நடந்து செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இது தொடர்பாக இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என பலமுறை அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று புகார் அளித்தால் சிலர் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் எனக்கூறி பள்ளிக்குள் வந்து மிரட்டுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்து இங்கு வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    31 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.