வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
- வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்1
- முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு *போடிநாயக்கனூரைச் சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு . போடி மெட்டு அருகே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலக்குளம் அருகே உள்ள ஏலக்காய் தோட்ட பகுதியில் காட்டுயானை தாக்கியதில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கேரளா வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இழப்பீடு வழங்க கோரி அப்போது ஒரு தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெ ட்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேரளா காவல்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் போக்குவரத்து சீரானது. * தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஒச்சு என்ற ஒச்சப்பன் வயது சுமார் 65 . இவர் போடிநாயக்கனூர் நகர முன்னாள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார். தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரது மகளுக்கு தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு அருகே பூப்பாறை செல்லும் வழியில் போடிமெட்டில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைக்குளம் பகுதியில் ஏலக்காய் தோட்டம் ஒன்று உள்ளது. இப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். தற்போது அங்கு காய்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒச்சப்பன் தனது மகளுக்கு உதவியாக ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இன்று காலை அப்பகுதியில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஏலக்காய் தோட்ட பகுதியில் காய்கள் குறித்து பார்வையிடச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஏலக்காய் செடி பகுதிகளில் யானை ஒன்று மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் தொட்ட பகுதிக்குச் சென்ற ஒச்சப்பன் வீட்டிற்கு திரும்பாததால் அங்கு உள்ளவர்கள் அவரை தேடிய பொழுது தோத்த பகுதியில் அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து அவரிடம் உயிருக்கு போராடிய நிலையில் யானை தாக்கியதாக கூறப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நிலையில் உயிருக்கு போராடிய ஒச்சப்பனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடிமாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே பச்சையப்பன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் ஏலக்காய் செடியில் உள்ள குருத்துகளை உண்பதற்காக யானைகள் அதிகம் உலவும் சூழலில் அதிகாலையில் யானைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது . யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையே இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கேரளா மூணாறில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன போக்குவரத்து பாதிக்க பட்ட நிலையில் காவல்துறையினர் வனத்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது.1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- மயிலம் அடுத்த பெரமண்டூரில்தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் எல் வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மயிலம் வடக்கு ஒன்றியம் பெரமண்டுர் கிராமத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒன்றிய அவைத் தலைவர் டி. சி. முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் பி முருகன் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி பாலு மகேந்திரன் ஒன்றிய பொருளாளர் பொய்யாது ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் முருகேசன் சங்கர் ராஜேஷ் குபேந்திரன் தாடி முருகன் பாரதி அன்பு ரோஸ் தங்கராஜ் மிருதுளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்1
- கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி குடும்பத்தினர் மாயம் – மீட்டுத்தர மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு! தேனி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பேரிடர் காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி, சுப்பிரமணி கோவில் தெருவைச் சேர்ந்த N. சுந்தரநாகராஜன் என்பவரின் தாயார், தம்பி மற்றும் சகோதரி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 14 (14.08.2026) அன்று கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக சுற்றுலா புறப்பட்டுச் சென்றுள்ளனர். தற்போது நேபாளப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சீரற்ற வானிலை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தொடர்பு பாதைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், யாத்திரை சென்ற குடும்பத்தினரை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் தீவிர மன உளைச்சலில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக N. சுந்தரநாகராஜன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2026) நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவில், "மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நேபாளப் பகுதியில் சிக்கித் தவிக்கும் எனது குடும்பத்தினரைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உருக்கமுடன் கேட்டுக்கொண்டுள்ளார். 2
- திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.1