அன்னவாசல் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில் திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, மெய்வழிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தொடர் காற்று மழையால் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரன்குளம் சாலையில் இருந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர் இதேபோன்று அன்னவாசல் இலுப்பூர் சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் உடைந்து சாலைகளில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் பலத்த காற்று வீசியதால் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது இந்த மழையால் முக்கண்ணாமலைப்பட்டி வாரசந்தையில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது இதனால் வியபாரிகள் சிரமம் அடைந்தனர்
அன்னவாசல் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அன்னவாசல் சுற்று வட்டார பகுதிகளில் திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, மெய்வழிச்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்
சிரமடைந்தனர் இந்தநிலையில் நேற்று மாலை அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த தொடர் காற்று மழையால் முக்கண்ணாமலைப்பட்டி சக்கரன்குளம் சாலையில் இருந்த மரம் ஒன்று சாலையில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகளும்
பொதுமக்களும் சிரமம் அடைந்தனர் இதேபோன்று அன்னவாசல் இலுப்பூர் சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகள் உடைந்து சாலைகளில் விழுந்தது இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர் பலத்த காற்று வீசியதால் அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் மின் தடை ஏற்பட்டது இந்த மழையால் முக்கண்ணாமலைப்பட்டி வாரசந்தையில் தண்ணீர் புகுந்தது தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது இதனால் வியபாரிகள் சிரமம் அடைந்தனர்
- திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை 3:45 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 5:25 மணிமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.1
- மணப்பாறை அருகே வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி. திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி என்பவருடன் திருமணம் ஆகி சுமார் 25 ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று தனது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள N.பூலாம்பட்டி SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1
- சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் சித்தர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 46 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், பெரிய மாட்டு பிரிவிற்கு 7 மைல் தூரமும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவிற்கு 5 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு பிரிவில் 18 ஜோடி மாடுகளும் சிறிய மாட்டு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. கொல்லங்குடி - காளையார்கோவில் சாலையில் நடைபெற்ற போட்டியினை அழகாபுரி, கொல்லங்குடி, காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர். பெரிய மாட்டு பிரிவில் ஒரு மாட்டு வண்டி சாலையோரம் இருந்த கம்பத்தில் மீது மோதி உடைந்த நிலையிலும் ஒரு மாடு சாரதி இல்லாத நிலையிலும் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று ஓடியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- இன்று கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் மலர் கண்காட்சி சீசன்தொடக்கத்தின்ஆரம்பம் என்பதால்கூட்டமமும் அதிகமாக காணப்படுகிறது2
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வைகை ஆற்றில் நேற்று இரவு முதல் தங்கி இன்று வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகரை சாமி தரிசனம் செய்தனர் மேலும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதை செய்தி சேகரிப்பதற்காக வரிசையாக நின்ற வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற கார்த்திகேயன் என்ற போக்குவரத்து காவலர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று அருகில் வந்து செய்தியாளரிடம் உரிமையில் பேசி வாக்குவாதம் செய்தார், ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை சரி செய்யாமல் செய்தி எடுக்கும் செய்தியாளரை போக்குவரத்து காவலர் வம்பு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், குறிப்பாக மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டானது வைக்கப்பட்டுள்ளது.2
- தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.1