மானாமதுரையில் போக்குவரத்து நெரிசலை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வைகை ஆற்றில் நேற்று இரவு முதல் தங்கி இன்று வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகரை சாமி தரிசனம் செய்தனர் மேலும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதை செய்தி சேகரிப்பதற்காக வரிசையாக நின்ற வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற கார்த்திகேயன் என்ற போக்குவரத்து காவலர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று அருகில் வந்து செய்தியாளரிடம் உரிமையில் பேசி வாக்குவாதம் செய்தார், ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை சரி செய்யாமல் செய்தி எடுக்கும் செய்தியாளரை போக்குவரத்து காவலர் வம்பு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், குறிப்பாக மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டானது வைக்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் போக்குவரத்து நெரிசலை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வைகை ஆற்றில் நேற்று இரவு முதல் தங்கி இன்று வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகரை சாமி தரிசனம் செய்தனர் மேலும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதை செய்தி
சேகரிப்பதற்காக வரிசையாக நின்ற வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற கார்த்திகேயன் என்ற போக்குவரத்து காவலர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று அருகில் வந்து செய்தியாளரிடம் உரிமையில் பேசி வாக்குவாதம் செய்தார், ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை சரி செய்யாமல் செய்தி எடுக்கும் செய்தியாளரை போக்குவரத்து காவலர் வம்பு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், குறிப்பாக மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டானது வைக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் சித்தர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 46 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், பெரிய மாட்டு பிரிவிற்கு 7 மைல் தூரமும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவிற்கு 5 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு பிரிவில் 18 ஜோடி மாடுகளும் சிறிய மாட்டு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. கொல்லங்குடி - காளையார்கோவில் சாலையில் நடைபெற்ற போட்டியினை அழகாபுரி, கொல்லங்குடி, காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர். பெரிய மாட்டு பிரிவில் ஒரு மாட்டு வண்டி சாலையோரம் இருந்த கம்பத்தில் மீது மோதி உடைந்த நிலையிலும் ஒரு மாடு சாரதி இல்லாத நிலையிலும் தொடர்ந்து போட்டியில் பங்கேற்று ஓடியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.1
- மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று போல் இன்றும் இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது. இம் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் திருவிழாவில் அழகரை காண சென்ற பக்தர்கள் ஆம் மழையால் சிரமப்பட்டனர்.1
- Post by முத்துஇருளன்1
- இன்று கொடைக்கானலில் தொடர் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அதிகம் மலர் கண்காட்சி சீசன்தொடக்கத்தின்ஆரம்பம் என்பதால்கூட்டமமும் அதிகமாக காணப்படுகிறது2
- சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் கடும் அவதி மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனை சோழவந்தான் நகரம் மற்றும் சுற்றுப்புற 20 க்கும்மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மின்தடை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளான நிலையில் நோயாளிகளுடன் இருந்த உறவினர்கள் விசிறி போன்ற உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்தனர் பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு ஜெனரேட்டர் வேலை செய்த நிலையில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனை போன்ற அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வைகை ஆற்றில் நேற்று இரவு முதல் தங்கி இன்று வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகரை சாமி தரிசனம் செய்தனர் மேலும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதை செய்தி சேகரிப்பதற்காக வரிசையாக நின்ற வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற கார்த்திகேயன் என்ற போக்குவரத்து காவலர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று அருகில் வந்து செய்தியாளரிடம் உரிமையில் பேசி வாக்குவாதம் செய்தார், ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை சரி செய்யாமல் செய்தி எடுக்கும் செய்தியாளரை போக்குவரத்து காவலர் வம்பு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், குறிப்பாக மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டானது வைக்கப்பட்டுள்ளது.2