logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரையில் இரண்டாவது நாளாக இடி, மின்னலுடன் மழை . மக்கள் மகிழ்ச்சி. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று போல் இன்றும் இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது. இம் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் திருவிழாவில் அழகரை காண சென்ற பக்தர்கள் ஆம் மழையால் சிரமப்பட்டனர்.

5 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
5 hrs ago

மதுரையில் இரண்டாவது நாளாக இடி, மின்னலுடன் மழை . மக்கள் மகிழ்ச்சி. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று போல் இன்றும் இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது. இம் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் திருவிழாவில் அழகரை காண சென்ற பக்தர்கள் ஆம் மழையால் சிரமப்பட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் பகலில் எரியும் தெருவிளக்கு
    1
    மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள்
பகலில் எரியும் தெருவிளக்கு
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வைகை ஆற்றில் நேற்று இரவு முதல் தங்கி இன்று வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகரை சாமி தரிசனம் செய்தனர் மேலும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதை செய்தி சேகரிப்பதற்காக வரிசையாக நின்ற வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற கார்த்திகேயன் என்ற போக்குவரத்து காவலர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று அருகில் வந்து செய்தியாளரிடம் உரிமையில் பேசி வாக்குவாதம் செய்தார், ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை சரி செய்யாமல் செய்தி எடுக்கும் செய்தியாளரை போக்குவரத்து காவலர் வம்பு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார், குறிப்பாக மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டானது வைக்கப்பட்டுள்ளது.
    2
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சித்திரை திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது இதைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வைகை ஆற்றில் நேற்று இரவு முதல் தங்கி இன்று வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகரை சாமி தரிசனம் செய்தனர் மேலும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் வந்த பொதுமக்கள் திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு தேவர் சிலை பகுதியில் போக்குவரத்து ஒரு கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதை செய்தி சேகரிப்பதற்காக வரிசையாக நின்ற வாகனங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு நின்ற கார்த்திகேயன் என்ற போக்குவரத்து காவலர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என்று அருகில் வந்து செய்தியாளரிடம் உரிமையில் பேசி வாக்குவாதம் செய்தார், ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதை சரி செய்யாமல் செய்தி எடுக்கும் செய்தியாளரை போக்குவரத்து காவலர் வம்பு இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,
குறிப்பாக மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டானது வைக்கப்பட்டுள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    7
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 
இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது 
இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது
தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் 
பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    1
    தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை  கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக முறிந்து விழுந்த வாழை மரங்கள். முந்தல் கிராமத்தில் நேற்று எதிர்பாராத விதமாக வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முரிந்து விழுந்து சேதம். திருவிழாவிற்கு போடப்பட்ட பந்தல் முற்றிலும் சரிந்து விழுந்து நிலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக முடிந்து விழுந்த மின் கம்பங்கள் மரங்கள் சரிந்து விழுந்ததால் வீடுகள் மேற்கூரைகள் சேதம். உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை* தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முந்தல் மலை கிராமம் மற்றும் மேலப் புரவு ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்கள் தமிழக கேரள எல்லை பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முந்தல் கிராமம். இப்பகுதியில் மாங்காய் வாழை தென்னை பாக்கு போன்ற பல்வேறு வர்த்தக பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மழை குறைவாக இருந்து நிலையிலும் சூறாவளிக்காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இப்பகுதியில் வீசிய திடீர் சூறாவளி காற்று காரணமாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மரங்களில் அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் 20 நாட்களில் விற்பனைக்கு அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்து உள்ளனர். மேலும் இப்பகுதியில் முந்தல் கிராமத்தில் திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தல் வீசிய சூறாவளி காற்று காரணமாக முழுவதுமாக சரிந்து விழுந்தது. அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்து வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது. மேலும் மின் கம்பம் சாய்ந்து கீழே விழுந்து உடைந்து நொறுங்கி நிலையில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாகவே கடுமையான கோடை வெயில் கொளுத்தி வந்து நிலையில் நேற்று மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில் வீசியபலத்த சூறாவளி காற்று காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகள் பெருமிழப்பை சந்தித்த நிலையில் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    1
    போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக முறிந்து விழுந்த வாழை மரங்கள்.
முந்தல் கிராமத்தில் நேற்று எதிர்பாராத விதமாக வீசிய சூறாவளி காற்று காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முரிந்து விழுந்து சேதம்.
திருவிழாவிற்கு போடப்பட்ட பந்தல் முற்றிலும் சரிந்து விழுந்து நிலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும்
மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக முடிந்து விழுந்த மின் கம்பங்கள் மரங்கள் சரிந்து விழுந்ததால் வீடுகள் மேற்கூரைகள் சேதம்.
உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை* 
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முந்தல் மலை கிராமம் மற்றும் மேலப் புரவு ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்கள் 
தமிழக கேரள எல்லை பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது முந்தல் கிராமம்.
இப்பகுதியில் மாங்காய் வாழை தென்னை பாக்கு போன்ற பல்வேறு வர்த்தக பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று பகல் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை சுமார் மூன்று முப்பது மணி அளவில் எதிர்பாராத விதமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
மழை குறைவாக இருந்து நிலையிலும் சூறாவளிக்காற்று காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது.
இப்பகுதியில் வீசிய திடீர் சூறாவளி காற்று காரணமாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை மரங்களில் அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது.
இதனால் 20 நாட்களில் விற்பனைக்கு அறுவடை செய்ய காத்திருந்த விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்தித்து உள்ளனர்.
மேலும் இப்பகுதியில் முந்தல் கிராமத்தில் திருவிழாவிற்காக போடப்பட்ட பந்தல் வீசிய சூறாவளி காற்று காரணமாக முழுவதுமாக சரிந்து விழுந்தது.
அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் ஆதி மலைவாழ் பழங்குடியினர் வசித்து வரும் மேலப்பரவு கிராமத்தில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்து வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தது.
மேலும் மின் கம்பம் சாய்ந்து கீழே விழுந்து உடைந்து நொறுங்கி நிலையில் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே கடுமையான கோடை வெயில் கொளுத்தி வந்து நிலையில் நேற்று மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில் வீசியபலத்த சூறாவளி காற்று காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகள் பெருமிழப்பை சந்தித்த நிலையில்  குடியிருப்பு வாசிகளும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் 
உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நாளான நேற்று ஆற்றில் அழகர் இறங்கினார் .இன்று (மே.2) காலை வண்டியூரில் அழகர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்வு விடிய விடிய நடைபெறும்.
    1
    மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நாளான நேற்று ஆற்றில் அழகர் இறங்கினார் .இன்று (மே.2) காலை வண்டியூரில் அழகர் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்வு விடிய விடிய நடைபெறும்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    12 hrs ago
  • மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் பகலில் எரியும் தெருவிளக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மேட்டுநீரேத்தான் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் வயல்வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் வாடிப்பட்டி பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாக உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி என கண்துடைப்பு நாடகமாடும் மின்வாரியத்தின் இந்த அலட்சியப் போக்குக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதோடு இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
    1
    மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள்
பகலில் எரியும் தெருவிளக்கு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மேட்டுநீரேத்தான் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.
வாகன ஓட்டிகள் மற்றும் வயல்வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் வாடிப்பட்டி பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி என கண்துடைப்பு நாடகமாடும் மின்வாரியத்தின் இந்த அலட்சியப் போக்குக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதோடு இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குதிரை வண்டி எல்லை பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 28 குதிரைகள் பங்கேற்றன. மதுரை தொண்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில், 7 மைல் தூரம் பந்தய எல்லைகயாக நிர்ணயிக்கப்பட்டது. பாய்ந்து சென்ற குதிரை வண்டி போட்டியினை அழகாபுரி, கொல்லங்குடி, காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர். விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    1
    சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற  குதிரை வண்டி எல்லை பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 28 குதிரைகள் பங்கேற்றன. மதுரை தொண்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில்,  7 மைல் தூரம் பந்தய எல்லைகயாக நிர்ணயிக்கப்பட்டது. பாய்ந்து சென்ற குதிரை வண்டி போட்டியினை அழகாபுரி, கொல்லங்குடி, காளையார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.  விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த குதிரை வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.