Shuru
Apke Nagar Ki App…
வேடசந்தூரில் வாக்குப்பதிவு முடிவு அறிவிக்கும் பொழுது மக்கள் அச்சமின்றி இருக்க கொடி அணிவகுப்பு. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
RAJA
வேடசந்தூரில் வாக்குப்பதிவு முடிவு அறிவிக்கும் பொழுது மக்கள் அச்சமின்றி இருக்க கொடி அணிவகுப்பு. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் வேடசந்தூர் போலீசார் வேடசந்தூர் நகர் பகுதியில் கொட்டும் மழை மற்றும் சூறாவளி காற்றிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். வேடசந்தூர் ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். வேடசந்தூர் கூம்பூர் மற்றும் ஆயுதப்படை போலீசார் வேடசந்தூர் ஆர்.ஹச்.காலனி முதல் ஆத்துமேடு வரை ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் பகலில் எரியும் தெருவிளக்கு1
- மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி . சாலைகளை சீரமைப்பு செய்த பின்னர் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பாதுகாப்பில் இந்த சுருளி அருவிப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமாகவும் சுற்றுலா தளமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் மற்றும் தங்களின் இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங் கரையில் எல் தீபம் ஏற்றி தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் சுருளி அருவி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால் சுருளி அருவி பகுதி தண்ணீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது இதனால் கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் . இந்நிலையில் நேற்று இரவு சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசி பாறை, தூவானம் அணை வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகை பகுதிகளில் கனமழை பெய்ததால் மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது . மேலும் பலத்த காற்றுடன் அருவிப்பகுதியில் மழை பெய்ததால் அருவிக்குச் செல்லும் சாலையில் இராட்சச மரம் முறிந்து விழுந்தும் ஆங்காங்கே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் கிடைக்கும் மரங்களை அகற்றி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு அதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் . மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு செல்கின்றனர் .1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் ஜம்புலிபுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், கோவிலின் முன்பாக உள்ள நிலையை வந்தடைந்தது தேர் நிலையை அடைந்ததும், அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வாழைப்பழம், நாணயங்கள், பருத்தி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை மக்கள் கூட்டத்தில் வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் பின்னர் சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது7
- Post by G.thangarasu1
- மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்தது. நேற்று போல் இன்றும் இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது. இம் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் திருவிழாவில் அழகரை காண சென்ற பக்தர்கள் ஆம் மழையால் சிரமப்பட்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- மிகத் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் பகலில் எரியும் தெருவிளக்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மேட்டுநீரேத்தான் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. வாகன ஓட்டிகள் மற்றும் வயல்வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் வாடிப்பட்டி பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதும் தொடர்கதையாக உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி என கண்துடைப்பு நாடகமாடும் மின்வாரியத்தின் இந்த அலட்சியப் போக்குக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவிப்பதோடு இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.1
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தச் சூறாவளிக் காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் காசி, தங்கவேல் மற்றும் சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் ஆகியோர் தங்களது தோட்டங்களில் செவ்வாழை மற்றும் நாட்டு ரக வாழைகளை பயிரிட்டிருந்தனர். சுமார் 2 ஆயிரம் வாழை மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்று இரவு வீசிய கடும் சூறாவளிக் காற்றினால் இந்த 2 ஆயிரம் வாழை மரங்களும் நிலைகுலைந்து அடியோடு சாய்ந்து மண்ணோடு மண்ணாகின. இதேபோல், ஆசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி பெரியஇருளன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த சுமார் 1500 செவ்வாழை மரங்களும் சூறாவளி காற்றின் வேகத்திற்குத் தாளாமல் முறிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தன. பல மாதங்களாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, பலன் தரும் நேரத்தில் இயற்கைச் சீற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "பல மாத உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிட்டது. வாழை விவசாயத்திற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்திருந்தோம். அறுவடை செய்து கடனை அடைக்கலாம் என்று இருந்த வேளையில், சூறாவளி காற்று எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது. கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள எங்களுக்கு அரசு உடனடியாகப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்து, உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- Post by G.thangarasu1