Shuru
Apke Nagar Ki App…
எங்க ஊர்ல இருந்து கோயில் வந்து எனக்கு குழந்தையா இருக்கும்போதே கரெக்டா ஆரம்பிச்சாங்க இன்னும் கட்டினே இருங்க ரொம்ப கட்டவே இல்ல இன்னும் அது வந்து நீங்க வந்து தீர்ப்பு சொல்லணும்
Selvam Selvam
எங்க ஊர்ல இருந்து கோயில் வந்து எனக்கு குழந்தையா இருக்கும்போதே கரெக்டா ஆரம்பிச்சாங்க இன்னும் கட்டினே இருங்க ரொம்ப கட்டவே இல்ல இன்னும் அது வந்து நீங்க வந்து தீர்ப்பு சொல்லணும்
- Sk Rasidபாண்டிச்சேரி, பாண்டிச்சேரி, புதுச்சேரிBankura ki khabar4 days ago
- Selvam SelvamPuducherry Taluk, Pondicherryபாண்டிச்சேரி அரியாங்குப்பம் சண்முக நகர், ராம்ஸின் வீதி6 days ago
- Selvam SelvamPuducherry Taluk, Pondicherry😔6 days ago
More news from தமிழ்நாடு and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள் விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் மோகனூர் ஊராட்சி புலவனூரில் அமைந்துள்ள ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஓட்டு கட்டிடத்தில் இருந்த இக்கோவில் இடிக்கப்பட்டு, நாகை சின்மயா மிஷன் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் புதிதாக கோவில் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகா பூர்ணாஹூதியுடன் கடம்புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் நிரப்பிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவரான காளியம்மன் மற்றும் விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- பஞ்சாயத்தில் முறைகேடு உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் என்னை கேட்காதீர்கள் பஞ்சாயத்தில் கேளுங்கள் என அலட்சியமாக அதிகாரி பொதுமக்களிடம் பதில் அளித்ததால் வாக்குவாதம். திரும்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் காக்கங்கரை கிராம பஞ்சாயத்தின் முறைகேடு குறித்து பதில் அறிக்கையில் பழைய பொருட்களின் இருப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளது என்று பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறது என்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு இல்லை என்றும் கழிவு நீர் கால்வாய் சரியான அளவிற்கு போடப்படுகிறது என்றும் சுந்தரம் பள்ளி தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்ததில் முறைகேடு இல்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மிகுந்த வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என சுரேஷ்குமார் அளித்த மானுவில் தெரிவித்து இருந்தார்.1
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் வீட்டு வசதி இல்லாத ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக வசித்து வரும் இடங்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும், குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களை பெற்றனர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக அனுப்பி வைத்து, மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி சரசம்மாள் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூர் பகுதி சேர்ந்த சமயபுல்லா வயது 18மற்றும் பிலால் வயது 18 ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வாணியம்பாடி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.1
- கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டிஎன்டியுசி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது .நிகழ்விற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே. மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க தலைவர் ஜி.ஆர்.மூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி பங்கேற்றனர். நிகழ்வை ஒட்டி ஆட்டோ சங்கப் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை இந்தியன் சிட்டி ஸ்கூல் வளாகத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் அய்யம்பேட்டை நகர அரிமா சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார் சங்க மாநில தலைவர் முகமதுஇப்ராஹிம் சமூக நல்லிணக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்,உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பாபநாசம் வட்டாச்சியர் சந்தனவேல் மற்றும் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர்கள், அய்யம்பேட்டை அரிமா சங்கத்தினர்கள், விவசாயிகள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், இமாம்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1
- *அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.* ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு நாடுகளின் ஏகாதிபத்திய தாக்குதலை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இடதுசாரி அமைப்புகள் இன்று தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவின் இந்த அநீதியான தாக்குதல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், ஈரானின் மீறிய உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரி, அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிசுபாலன் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற அமைப்புகள் பங்கேற்றனர்.1