வையசேரி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் ஸ்ரீ மாயாண்டி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள் விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.
வையசேரி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் ஸ்ரீ மாயாண்டி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள் விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் உலக மகளிர் தின கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியில் மகளிர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகளிர் பாதுகாப்பு, மகளிரை காத்திடுங்கள், பூக்கோலம், ரங்கோலி கோலம், பூக்கோலம், சிக்கு கோலம், கிளி கோலம் என கோலமிட்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க கண்ணதாசன், தலைவர் தேவராஜன் ஆகியோர்கள் கோலங்களை பார்வையிட்டு கோலமிட்ட மகளிர்களிடம் அதற்கான பொருள் விளக்கங்களை கேட்டு மதிப்பெண் வழங்கி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம், ஆறுதல் பரிசுகளுக்கானவர்களை தேர்வு செய்தனர்.1
- வேளாங்கண்ணியில் பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தவெக முற்றுகை போராட்டம்: பேரிகார்டுயை அகற்றி உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம் நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையான மாதா குளம் மெயின் ரோடு பகுதியில் தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலையில் வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.இதனை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.போராட்டக்காரர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றதை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேரிகேடு அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது சிலர் பேரிகேடுகளை அகற்றி கடை முன் செல்ல முயன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இது தொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதன் பெயரில் போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- உலக புகழ் பெற்ற வேளாங்கன்னி பேராலயத்திற்க்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மாதா குளம் மெயின்ரோடு பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு மிக அருகான்மையிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது இந்த நிலையில் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாதா குளம் அருகில் உள்ள டார்க் மார்க் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 150 பேர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் போலீஸ் சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- தேவகோட்டை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி தனது தந்தைக்கு மிக சிறியலான பூரண கும்பம் வழங்கி அசத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாடியார் வீதியில் நகை பட்டறை தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவர் மிக மிக குறைந்த அளவு கொண்ட தங்கத்தில் பொங்கல் பானை கரும்பு அடுப்பு கரண்டி உள்ளிட்ட வில் செய்து தனது மகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் அதேபோல் காரைக்குடி பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற தனது தந்தைக்கு சாந்தி கல்யாண விழாவில் மகன் முருகானந்தம் வெள்ளி பரிசு வழங்கினார் அதில் பானை,இலை,தேங்காய் உள்ளிட்ட இரண்டு சென்டி மீட்டர் உயரம்,3½ கிராம்,அளவு கொண்ட வெள்ளியில் மிக சிறிய அளவில் கும்பம் செய்து தாய்,தந்தையருக்கு வழங்கி தனது திறமையை பரிசாக வழங்கினார், பாண்டியன் சித்ரா தம்பதியினர் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் திறமையை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். தனது திறமையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையை கண்டு பல்வேறு தரப்பினர் பாராட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள் விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.1