logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அய்யம்பேட்டையில்  சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி  தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் தாலுக்கா,  அய்யம்பேட்டை  இந்தியன் சிட்டி ஸ்கூல் வளாகத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் அய்யம்பேட்டை நகர அரிமா சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார் சங்க மாநில தலைவர்  முகமதுஇப்ராஹிம் சமூக நல்லிணக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்,உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பாபநாசம் வட்டாச்சியர் சந்தனவேல் மற்றும் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர்கள், அய்யம்பேட்டை அரிமா சங்கத்தினர்கள், விவசாயிகள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், இமாம்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

7 hrs ago
user_சிவகுமார்.மு
சிவகுமார்.மு
பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
7 hrs ago

அய்யம்பேட்டையில்  சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி  தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் தாலுக்கா,  அய்யம்பேட்டை  இந்தியன் சிட்டி ஸ்கூல் வளாகத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் அய்யம்பேட்டை நகர அரிமா சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சங்க மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார் சங்க மாநில தலைவர்  முகமதுஇப்ராஹிம் சமூக நல்லிணக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்,உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. பாபநாசம் வட்டாச்சியர் சந்தனவேல் மற்றும் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர்கள், அய்யம்பேட்டை அரிமா சங்கத்தினர்கள், விவசாயிகள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், இமாம்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் உலக மகளிர் தின கோலப்போட்டி  நடைபெற்றது. போட்டியில்  மகளிர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகளிர் பாதுகாப்பு, மகளிரை காத்திடுங்கள்,  பூக்கோலம், ரங்கோலி கோலம், பூக்கோலம், சிக்கு கோலம், கிளி கோலம் என கோலமிட்டு  தங்கள் தனித்திறமையை  வெளிப்படுத்தினர்.  விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர்  தங்க கண்ணதாசன், தலைவர் தேவராஜன் ஆகியோர்கள் கோலங்களை பார்வையிட்டு கோலமிட்ட மகளிர்களிடம் அதற்கான பொருள் விளக்கங்களை கேட்டு  மதிப்பெண் வழங்கி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம், ஆறுதல்  பரிசுகளுக்கானவர்களை  தேர்வு செய்தனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் உலக மகளிர் தின கோலப்போட்டி  நடைபெற்றது. போட்டியில்  மகளிர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகளிர் பாதுகாப்பு,
மகளிரை காத்திடுங்கள்,  பூக்கோலம், ரங்கோலி கோலம், பூக்கோலம், சிக்கு கோலம்,
கிளி கோலம் என கோலமிட்டு 
தங்கள் தனித்திறமையை 
வெளிப்படுத்தினர். 
விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர்  தங்க கண்ணதாசன்,
தலைவர் தேவராஜன் ஆகியோர்கள் கோலங்களை பார்வையிட்டு கோலமிட்ட மகளிர்களிடம் அதற்கான பொருள் விளக்கங்களை கேட்டு  மதிப்பெண்
வழங்கி மதிப்பெண் அடிப்படையில்
முதல், இரண்டாம், மூன்றாம், ஆறுதல்  பரிசுகளுக்கானவர்களை 
தேர்வு செய்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • 10.03.2026 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டியகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிடங்களூர் பகுதியில்  கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கீழவீடங்கலூர்  பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூர் – திருக்குவளை – கச்சனம் இணைப்பு பிரதான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இதனால் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    10.03.2026
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என கூறி காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவீடங்கலூர் பகுதிக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டியகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவிடங்களூர் பகுதியில்  கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள தரைமட்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கீழவீடங்கலூர்  பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூர் – திருக்குவளை – கச்சனம் இணைப்பு பிரதான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகத்தை விரைவில் சீரமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இதனால் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    49 min ago
  • உலக புகழ் பெற்ற வேளாங்கன்னி பேராலயத்திற்க்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மாதா குளம் மெயின்ரோடு பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு மிக அருகான்மையிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது இந்த நிலையில் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாதா குளம் அருகில் உள்ள டார்க் மார்க் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 150 பேர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் போலீஸ் சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    உலக புகழ் பெற்ற வேளாங்கன்னி பேராலயத்திற்க்கு நாள்தோறும் ஆயிரகணக்கானோர் வருகை தருகின்றனர். இந்த நிலையில் மாதா குளம் மெயின்ரோடு பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. இந்த டாஸ்மார்க் கடை பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு மிக அருகான்மையிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது
இந்த நிலையில் டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. மாதா குளம் அருகில் உள்ள டார்க் மார்க் முன்பு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 150 பேர்  முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் போலீஸ் சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    17 hrs ago
  • திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன
    1
    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாயம் சங்கத்தினர் சார்பாக திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டி மூன்று நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வாக்குறுதி அளித்துள்ளன என்று மூத்த தலைவர் நேரில் சென்று நேற்று மார்ச் 9 ம் தேதி மாலை 5 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்ததில் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா
    1
    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா
    user_Aravinth
    Aravinth
    Tour Guide மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேவகோட்டை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி தனது தந்தைக்கு மிக சிறியலான பூரண கும்பம் வழங்கி அசத்தல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாடியார் வீதியில் நகை பட்டறை தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவர் மிக மிக குறைந்த அளவு கொண்ட தங்கத்தில் பொங்கல் பானை கரும்பு அடுப்பு கரண்டி உள்ளிட்ட வில் செய்து தனது மகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் அதேபோல் காரைக்குடி பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற தனது தந்தைக்கு சாந்தி கல்யாண விழாவில் மகன் முருகானந்தம் வெள்ளி பரிசு வழங்கினார் அதில் பானை,இலை,தேங்காய் உள்ளிட்ட இரண்டு சென்டி மீட்டர் உயரம்,3½ கிராம்,அளவு கொண்ட வெள்ளியில் மிக சிறிய அளவில் கும்பம் செய்து தாய்,தந்தையருக்கு வழங்கி தனது திறமையை பரிசாக வழங்கினார், பாண்டியன் சித்ரா தம்பதியினர் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் திறமையை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். தனது திறமையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையை கண்டு பல்வேறு தரப்பினர் பாராட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    1
    தேவகோட்டை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி தனது தந்தைக்கு மிக சிறியலான  பூரண கும்பம் வழங்கி அசத்தல் 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாடியார் வீதியில் நகை பட்டறை தொழில் செய்து வரும் முருகானந்தம் என்பவர்  மிக மிக குறைந்த அளவு கொண்ட தங்கத்தில் பொங்கல் பானை கரும்பு அடுப்பு கரண்டி உள்ளிட்ட வில் செய்து தனது மகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தினார் அதேபோல்  காரைக்குடி பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற தனது தந்தைக்கு சாந்தி கல்யாண விழாவில் 
மகன் முருகானந்தம் வெள்ளி பரிசு வழங்கினார் அதில் பானை,இலை,தேங்காய் உள்ளிட்ட  இரண்டு சென்டி மீட்டர் உயரம்,3½ கிராம்,அளவு கொண்ட வெள்ளியில் மிக சிறிய அளவில் கும்பம் செய்து தாய்,தந்தையருக்கு வழங்கி தனது திறமையை பரிசாக வழங்கினார், பாண்டியன் சித்ரா தம்பதியினர் அதனைப் பெற்றுக் கொண்டு தனது மகனின் திறமையை கண்டு வியந்து பாராட்டி வாழ்த்தினார். தனது திறமையை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திறமையை கண்டு பல்வேறு தரப்பினர் பாராட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரனார்சுவாமி, ஸ்ரீமுனீஸ்வரசுவாமி, ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது..   கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன..  தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க,  கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு  புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.  கும்பாபிஷேக நிகழ்ச்சியில்  கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள்  விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், 
பாபநாசம் தாலுக்கா வையச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீமாயாண்டி அய்யனார்,
ஸ்ரீகருப்பண்ணசுவாமி,
ஸ்ரீவீரனார்சுவாமி,
ஸ்ரீமுனீஸ்வரசுவாமி,
ஸ்ரீசப்தமாதா ஆகிய ஆலயங்களின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது..  
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று, முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.. 
தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க,  கடம்புறப்பட்டு கோயில்களின் கோபுர கலசத்திற்கு  புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. 
கும்பாபிஷேக நிகழ்ச்சியில்  கிராமவாசிகள் நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை
வையச்சேரி கிராமவாசிகள், நாட்டாண்மைகள்,உபயதாரர்ள்குலதெய்வ வழிபாட்டாளர்கள்  விழாகுழுவினர்கள் செய்திருந்தனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.