Shuru
Apke Nagar Ki App…
ஆலம்பட்டி ஊராட்சி டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிச்சல் இராசிபுரம் வட்டம் ஆலம்பட்டி ஊராட்சி டாஸ்மார்க் கடையில் இன்று மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு கடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்று இரவு டாஸ்மாக் கடையில் கூட்டல் எரிச்சல் அதிகமாக இருந்தன
கணேஷ் G
ஆலம்பட்டி ஊராட்சி டாஸ்மாக் கடையில் கூட்ட நெரிச்சல் இராசிபுரம் வட்டம் ஆலம்பட்டி ஊராட்சி டாஸ்மார்க் கடையில் இன்று மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு கடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்று இரவு டாஸ்மாக் கடையில் கூட்டல் எரிச்சல் அதிகமாக இருந்தன
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.1
- Post by பெரியசாமி2
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற வருகிறது. கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.1
- முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்... பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்... மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...1