Shuru
Apke Nagar Ki App…
கல்வராயன் மலை பகுதியில் பாக்கு காபி போன்ற பெயர்கள் வெயிலில் கருகி சேதம் கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
M.P.Palani Samy
கல்வராயன் மலை பகுதியில் பாக்கு காபி போன்ற பெயர்கள் வெயிலில் கருகி சேதம் கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு, மிளகு, காபி போன்ற பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வந்த கல்வராயன் மலை விவசாயிகள், தற்போது கடும் வெயிலின் தாக்கத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட பாக்கு மற்றும் காபி செடிகள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ள கரைகாத்த முனியாண்டவர் கோயில் 54-ஆம் ஆண்டு சித்திரைபௌா்ணமி பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடா்ந்து, முணியாண்டவருக்கு அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது. விழாவில் வங்காரம்பேட்டை அரையபுரம் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1
- கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜா கடை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் கால யாக வேள்வி மங்கள இசையுடன்மகா பூர்ண ஹதி கடம் புறப்பாடு, பால்குடம், திருவீதி உலா அங்காள பரமேஸ்வரி அம்மன் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை மங்கல இசை ஒலிக்க வேதபாராயணங்கள் நடைபெற்றது .மேலும் அன்னதானமும் நடைபெற்றது1
- மணப்பாறை அருகே வீட்டிற்கு மின்சாரம் வரவில்லை என்று, மின்சார வாரிய அனுமதி பெறாமல் தானாக மின் மாற்றியில் பீஸ் போட ஏறியவர் மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி பலி. திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியை சேர்ந்தவர் இன்னாசி (50) இவரது மனைவி சகாயமேரி என்பவருடன் திருமணம் ஆகி சுமார் 25 ஆம் ஆண்டு நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி அவர் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இறந்து போன இன்னாசி N பூலாம்பட்டி மனைவியுடன் தனியாக வசித்துக் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். இன்று தனது வீட்டில் மின்சாரம் வரவில்லை என்று, தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள N.பூலாம்பட்டி SS no:1 -மின்மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியவர் மின்சாரம் தாக்கி மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்துள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் . இறந்தவரின் உடல் உடல் கூராய்வு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டன.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தொட்டியப்பட்டியில் பாம்பாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாம்பாளம்மன் அருளை பெற்று சென்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- எடப்பாடியில் அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... நாடு முழுவதும் தல அஜித் பிறந்தநாள் விழா கோலாக்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தாவந்தெரு பகுதியில் சேலம் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் இன்று தல அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அன்னதான விழாவில் சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்... இதில் எடப்பாடி நகர அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் ஊராட்சியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து ஏற்பாட்டில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தர்பூசணி நீர்மோர் பானக்கம் மற்றும் பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாதன் பொதுக்குழு உறுப்பினர் மோகன் திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் சதீஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- வேப்பனப்பள்ளி அருகே உள்ள V. மாதேப்பள்ளி கூட் ரோட்டில் அமைந்துள்ள தொழிலாளர் சங்கத்தின் தலைமைஅலுவலகத்தில்தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது இந்த தொழிலாளர் தினத்தைதொழிலாளர் சங்கமாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டதுமேலும் நிகழ்ச்சியில் தொழிலாளர்,பள்ளிமாணவமாணவிகள்ஆகியவர்கள் கலந்து கொண்டன.1