Shuru
Apke Nagar Ki App…
ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என சொன்னார்கள் ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த நிலையில் நன்றி தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நம்ம ஆளுங்க யாரை பார்த்தாலும் சொன்னாங்க ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் ஆகையால் வருங்காலங்களில் சிந்தித்து வாக்களியுங்கள் என மு. அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ABDUL SALAM
ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என சொன்னார்கள் ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த நிலையில் நன்றி தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நம்ம ஆளுங்க யாரை பார்த்தாலும் சொன்னாங்க ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் ஆகையால் வருங்காலங்களில் சிந்தித்து வாக்களியுங்கள் என மு. அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா புதுக்கோட்டை, திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில், AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி, முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.1
- வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை அனுப்ப தடை விதித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அந்தத் தடை நிரந்தரமாக தொடருமா என்பது குறித்து தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கிரவல் மண் குவாரிகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசின் புதிய கொள்கை முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கூறினார். மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜயின் ஊழலற்ற ஆட்சி இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்த அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்பதை இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு கூறினார்.1
- வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கீழ் வைகை கூட்டு குடிநீர் தொட்டி... மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த சுமார் ஒரு வருடமாய்நடந்த பணிகளில் போடிநாயக்கன்பட்டி செல்லும் பாதையில் காவுவாங்க காத்திருக்கும் குழி என்று கடந்தபத்துநாளுகளுக்கு முன்பு நம் ஸ்குரு ஆஃப் நியூஸ் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்தோம் அதன் எதிரொலியாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்தது பொதுமக்கள் பலரும் நிர்வாகத்தை பாராட்டினர்1
- புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்கள் பங்கேற்பு திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர், வெற்றிலை மற்றும் துளசி மாலையாக அலங்கரித்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயரின் திருவருளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று, தங்கள் வாழ்வு செழிக்கப் பிரார்த்தித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.1
- 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்3
- புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது இதனை அடுத்து நேற்று பெய்த மழையின் அளவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தல் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை புதுகை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை 46 மி.மீ,குடுமியான்மலை 30 மி.மீ, திருமயம் 25.2 மி.மீ அன்னவாசல் 16 மி.மீ , காரையூர் 10.4 மி.மீ, கந்தர்வகோட்டை 7.5 மி.மீ, கீரனூர் 6.4 மி.மீ,அரிமளம் 6 மி.மீ, உடையாளிபட்டி 5.8மி.மீ, பொன்னமராவதி 4.2 மி.மீ, ஆலங்குடி 3 மி.மீ,கரம்பக்குடி 1.2மி.மீ என மொத்தம் 161.7மி.மீ பதிவாகியுள்ளது.1
- மீனவள் வலையில் சிக்கிய அரேகிய வகை நட்சத்திர ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் தொண்டி மகா சக்தி புரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு சொந்தமான படகில் முனிஸ் இரண்டு மீனவர்கள் தொண்டி மகாசக்திபுரம் கடலுக்குச் சென்று வலையை எடுத்த போது வலையில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் தங்களது வலையில் அடுத்தடுத்து இரண்டு ஆமைகள் சிக்கி இருந்தது அதனை கண்ட மீனவர்கள் உடனடியாக வலையை அறுத்து பத்திரமாக மீண்டும் கடலுக்குள் இரண்டு ஆமைகளையும் விட்டனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அது தடை செய்யப்பட்ட ஆமை என்பதால் கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு படை அறிவுத்தலின்படி மீனவர்கள் பத்திரமாக நீண்ட நேரம் போராடி வலையை அறுத்து மீட்டு கடலில் விட்டனர். வலையில் சிக்கிய ஆமையை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரம் வலை சேதமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1