Shuru
Apke Nagar Ki App…
குமரியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் மரிய ஜெனிபர் நேற்று வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இவர்களுடன் அக்கட்சியினர் பலரும் உடனிருந்தனர். இந்த வாக்குறுதி மூலம் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
Magson jones
குமரியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் மரிய ஜெனிபர் நேற்று வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இவர்களுடன் அக்கட்சியினர் பலரும் உடனிருந்தனர். இந்த வாக்குறுதி மூலம் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்1
- புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமையில் நடந்தது1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.3
- *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து, பெண்கள் ஆலத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு* *பெரியகுளம் தொகுதியில் மக்களின் பேராதரவு எங்களுக்கு உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என பேட்டி* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சபரி ஐங்கரன் இன்று பெரியகுளம் தொகுதியில் தனது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார் தேவதானப்பட்டியில் இருந்து தேனி பங்களாமேடு வரை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் தேனி பங்களாமேடு பகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் சபரி ஐயங்கரனுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பட்டாசுகளை வெடித்து, மாலை அணிவித்தும் பெண்கள் ஆலத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர் பின்னர் பெரியகுளம் வேட்பாளர் சபரி ஐங்கரன் கூறுகையில் தொகுதியில் மக்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயமாக செய்து கொடுப்போம் இந்த முறை நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வது தான் எங்களது முதல் பணி பெரியகுளம் தொகுதியில் நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் மக்களின் பேராதரவு எங்கள் பக்கம் உள்ளது நாங்கள் தான் வெற்றி பெறுவோம் மக்கள் நல்லவர்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அதனால் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என தெரிவித்த அவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வோம் என தெரிவித்தார்1
- திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன? இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா? விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார். சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும், கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது. பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர், முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.1
- சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை முன்னிறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வேட்பாளர் மரிய ஜெனிபர் நேற்று வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இவர்களுடன் அக்கட்சியினர் பலரும் உடனிருந்தனர். இந்த வாக்குறுதி மூலம் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த கட்சி முனைப்பு காட்டி வருகிறது.1