Shuru
Apke Nagar Ki App…
உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
OREDESAM REPORTER
உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டு எடையார் ஊராட்சியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று (ஏப்ரல் 3) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.2
- செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.1
- முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்துள்ள முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் மிக விமர்சையாக நடைபெற்றது.திருக்கல்யாணம் கணபதி பூஜையுடன் தொடங்கி, திருமண சீர்வரிசை தாம்பூலத் தட்டுகள் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல், யாக வேள்வி, மற்றும் திருமண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து கன்னிகாதானம் நிகழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையை திருமாங்கல்யம் அணிவித்து மணமுடித்தார். இந்நிகழ்வின் இறுதியில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- திருப்பத்தூர், ஏப். 3: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள குண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மிகுந்த சிறப்பும், பக்தி பரவசமும் நிறைந்த நிலையில் அதிவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் அழகிய விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிராமம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் வழிபட்டனர். மேலும், அன்னதானம், முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றதால், திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழா சிறப்பாக நடைபெற கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.1
- Post by ஆ.கார்த்திக் PFHR1
- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் க.சுந்தர் அறிமுகக் கூட்டம் இன்று (03) உத்திரமேரூர் ஒன்றியம் மல்லியங்கரணை கூட்ரோடு பிரியா மஹாலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் திமுக வேட்பாளர் சுந்தர் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்1
- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சுந்தர் ஆகியோர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினர்1
- கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.1