logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாநகராட்சி எட்டாவது வார்டு பகுதியில் ஆணையாளர் திடீர் ஆய்வு! சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 8வது வார்டு பகுதியில் உள்ள நேரு நகரில், இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம் நேரில் பார்வையிட்டு தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் சேகரிக்கும் நான்கு வகையான குப்பைகளை எவ்வாறு சேகரித்து வாகனத்தில் வைக்கிறார்கள் என்று ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் தூய்மை பணியாளர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

1 day ago
user_Rajendran
Rajendran
salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
1 day ago
de39f912-3d16-46aa-af3c-bf7894521e8c

சேலம் மாநகராட்சி எட்டாவது வார்டு பகுதியில் ஆணையாளர் திடீர் ஆய்வு! சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 8வது வார்டு பகுதியில் உள்ள நேரு நகரில், இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம் நேரில் பார்வையிட்டு தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் சேகரிக்கும் நான்கு வகையான குப்பைகளை எவ்வாறு சேகரித்து வாகனத்தில் வைக்கிறார்கள் என்று ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் தூய்மை பணியாளர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்! விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பிரதிஷ்டை செய்த சிலைகளை கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சேலம் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏரியில் பூஜைகள் செய்து கரைக்கப்பட்டது. இதன் காரணமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    1
    சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்!
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பிரதிஷ்டை செய்த சிலைகளை கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சேலம் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏரியில் பூஜைகள் செய்து கரைக்கப்பட்டது. இதன் காரணமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு ..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில்  கரைப்பதற்காக எடுத்துச்  செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு  பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள்  மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியில்  இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த  தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர். இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு .....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் 
கரைப்பதற்காக எடுத்துச்  செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து பல்வேறு  பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள்  மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோனேரிப்பட்டியில்  இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த  தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர்.
இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு
    1
    தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை


ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை
ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    23 hrs ago
  • ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    1
    ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்!
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    23 hrs ago
  • வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர்  பாமகவில்  இணைந்தனர்.
    1
    வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் 

பாமகவில்  இணைந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    1 hr ago
  • கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி..! தருமபுரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியது என்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விலகி உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆவின் பால் கொள்முதல் சற்று சரிந்துள்ளதாகவும், பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் கால்நடை வளர்ப்போர் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். மேலும், மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சட்டப்பேரவையில் மழைநீர் வெளியேறுவதற்கான வசதி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாகவும், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசு சமீபத்தில் சுமார் ரூ.6,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.14,000 கோடி விவசாயக் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேருந்து நிலைய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பேருந்து நிலைய பிரச்சனைக்காக பாமக உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்றும் கூறினார். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்காக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் கரும்புகளை அரவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கரும்பு சாகுபடி குறைந்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி மற்றும் பாமக நிர்வாகிகள் பெரியசாமி, மாது, நம்பிராஜன், வாசு நாயுடு உள்ளிட்டோர், மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி..!
தருமபுரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியது என்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விலகி உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார்.
மேலும், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆவின் பால் கொள்முதல் சற்று சரிந்துள்ளதாகவும், பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் கால்நடை வளர்ப்போர் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். மேலும், மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சட்டப்பேரவையில் மழைநீர் வெளியேறுவதற்கான வசதி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாகவும், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் சுமார் ரூ.6,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.14,000 கோடி விவசாயக் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேருந்து நிலைய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பேருந்து நிலைய பிரச்சனைக்காக பாமக உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்றும் கூறினார்.
தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்காக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் கரும்புகளை அரவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கரும்பு சாகுபடி குறைந்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி மற்றும் பாமக நிர்வாகிகள் பெரியசாமி, மாது, நம்பிராஜன், வாசு நாயுடு உள்ளிட்டோர், மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்! தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர்  லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.