Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி மாதவன் என்பவர் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். பணிக்குச் சென்ற மனைவியை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றபோது, செவிலிமேடு அருகே வேலூர் பெங்களூர் புறவழிச் சாலையில் சென்ற காரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அதிவேகமாக வந்த காரால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Naga Rajan
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி மாதவன் என்பவர் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். பணிக்குச் சென்ற மனைவியை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றபோது, செவிலிமேடு அருகே வேலூர் பெங்களூர் புறவழிச் சாலையில் சென்ற காரில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அதிவேகமாக வந்த காரால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள்கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜூஸ்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கினர்1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- குருத்தோலை சப்பரத்தில் பவனி வந்த பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் 7-ம் நாள் முக்கிய நிகழ்வாக குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- தே மு தி க வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்1
- 180 கி. மீ வேகத்தில் சென்று அசத்த போகும் வந்தேபாரத் ரயில். சோதனை ஓட்டம் வெற்றி.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.2
- பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த K.S. நகரில் மாபெரும் கன்றுவிடும்விழா.1