கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்1
- இளம் நுகர்வோருக்கான புத்தாக்க பயிற்சி1
- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை டிசம்பர் 29 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதி தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் நிறைவேற்றாத பட்சத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் போராட்டத்தை வருகின்ற ஆறாம் தேதி முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பணிக்கொடை குடும்ப ஓய்வுதியின் வழங்க வேண்டும் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பதவி உயர்வு மற்றும் கல்வித் தகுதி தொடர்பான அநீதிகளை நீக்க வேண்டும் என்றும் வீழ்வோ பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி 150-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற விட்டால் வருகின்ற ஆறாம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கண்டன முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் ஒன்றிய தலைவர் சித்ரா ஒன்றிய செயலாளர் பரிமளா ஒன்றிய பொருளாளர் பர்வீன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி, வேல்விழி, விஜயா, தொளத், கமலவேணி, சுமதி, கவிதா, சக்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் உடுப்பத்தான் புதூரில் இன்று டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 3 करोड़ के लालच में बेटों ने पिता को सांप से दो बार डंसवाया1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1