logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2 hrs ago
user_Pooma
Pooma
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
2 hrs ago

தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More news from Tamil Nadu and nearby areas
  • கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள்கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜூஸ்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கினர்
    1
    கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள்கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜூஸ்,பிஸ்கட்,தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கினர்
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    13 hrs ago
  • ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்
    1
    ஊத்தங்கரை அலினா சில்க்ஸ்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    19 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தே மு தி க வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்
    1
    தே மு தி க வின்  மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது  அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    12 hrs ago
  • கோவில் ஒரு அற்புதமான இடம். அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
    1
    கோவில் ஒரு அற்புதமான இடம்.
அங்கு சென்று வந்தால் இலவசமாக என்ன என்ன பயன்கள் கிடைக்கும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    15 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கல்லாலங்குடி ஊராட்சி MGNRE GS.2025-2026 श्री ரூபாய்.13.36.000 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கல்லாலங்குடி ஊராட்சி MGNRE GS.2025-2026 श्री ரூபாய்.13.36.000 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    2
    சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த K.S. நகரில் மாபெரும்  கன்றுவிடும்விழா.
    1
    பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த K.S. நகரில் மாபெரும் 
கன்றுவிடும்விழா.
    user_FAYAZ
    FAYAZ
    Krishnagiri, Tamil Nadu•
    13 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.