Shuru
Apke Nagar Ki App…
விலைவாசி உயர்வை கண்டித்து (ஒன்றிய அரசுக்கு எதிராக)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இடம்: மேலப்பாளையம். விலைவாசி உயர்வை கண்டித்து (ஒன்றிய அரசுக்கு எதிராக)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை வீரபாண்டியன்
விலைவாசி உயர்வை கண்டித்து (ஒன்றிய அரசுக்கு எதிராக)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இடம்: மேலப்பாளையம். விலைவாசி உயர்வை கண்டித்து (ஒன்றிய அரசுக்கு எதிராக)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- விலைவாசி உயர்வை கண்டித்து (ஒன்றிய அரசுக்கு எதிராக)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இடம்: மேலப்பாளையம். விலைவாசி உயர்வை கண்டித்து (ஒன்றிய அரசுக்கு எதிராக)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.4
- சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினார். வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளான நியாய விலைக் கடை பராமரிப்பு பணிக்கான ஆணை வழங்கப்படாதது, தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், வார்டைச் சேர்ந்த செல்வின் என்பவரது வீட்டுக்குச் செல்லும் குடிநீர் இணைப்பு, பணகுடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணியின் போது உடைந்துவிட்டது. இந்த குடிநீர் இணைப்பை சரிசெய்து கொடுக்க வேண்டுமென்று வார்டு கவுன்சிலர் என்கிற முறையில் கோரிக்கை விடுத்தும் இதுவரை சரிசெய்து கொடுக்கப்படாததைக் கண்டித்தும் தர்ணா போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.1
- ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் ஸ்ரீ குலசேகர வள்ளி அம்பாள் உடனுறை குலசேகர நாதர் திருக்கோவிலில், திருமஞ்சனத்தை முன்னிட்டு இன்று இரவு ஆனந்த நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு அபிஷேகம் பால், மஞ்சள், இளநீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, விபூதி, பன்னீர், பழச்சாறு உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் செய்யப்பட்டது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, ஆனந்த நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் பட்டு வஸ்திரம், வண்ண பூக்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் மகா தீபராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேவாராம் மற்றும் திருவாசகம் பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டனர்.1
- தூத்துக்குடி நகரப் பணிமனையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் SDR. சாமுவேல் ராஜ் கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்பளித்தார். அவருக்கு தொழிற்சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் பணிமனை தலைவர் V. மாடசாமி, செயளாலர் G. தங்கராஜ், பொருளாளர் S. தொப்பைகணபதி, துணை தலைவர் M. ராஜசங்கரன், துணை செயலாளர் B. சிவசுப்பிரமணியன், இணை செயலாளர் N. சுரேஷ்குமார் மற்றும் பிற தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு, அங்கு வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, பிறந்தநாள் கொண்டாட்டம் மேலும் சிறப்பிக்கப்பட்டது.2
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லாக்கு சாலை முத்து நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜையும் நித்திய பூஜையும் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை 6.25 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், புண்ணியாக வாசனம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், அம்பாள் மூல மந்திர ஹோமம், பூர்ணாஷுதி மற்றும் தீபாராதனை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ மகா கணபதி கோயிலில் இருந்து பால் குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், வாசனை திரவியங்கள் மற்றும் கும்ப கலச நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்பாள் அழகிய அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்; சோடச தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பஜனைப் பாடல்களைப் பாடி அம்பாளை தரிசித்தனர். நிறைவாக, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட பொறுப்பாளர் திரு ரங்கசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திரு ஆதிமூலம் ஆகியோர் தலைமை தாங்கினர். தென்னக மானாவாரி விவசாயிகள் சங்கத் தலைவர் திரு பிரேம்குமார் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். விவசாயிகள் சௌந்தரராஜன், ஜெகநாதன், சேதுராஜ், கோபால்சாமி ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியான பரன்குன்றாபுரம் என் டி எஸ் சார்லஸ் தலைமை தாங்கினார். விழாவில், கடந்த 2025-2026 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், டி டி டி ஏ நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 520 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி என் டி எஸ் சார்லஸ் வாழ்த்திப் பேசினார். இந்த நிகழ்வில் தவெக ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிவி கதிர்வேல், துணை செயலாளர் சுரேஷ், இணை செயலாளர் லூர்துசாமி, உதயகுமார், ரேக்லேண்ட், ஒன்றிய துணை செயலாளர் ஆரோக்கிய லிவின்யா, கிளை நிர்வாகிகள் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.1
- தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளையொட்டி, கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலையம் முன்பாக, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் திரளாகக் கூடி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, புதியம்புத்தூர் ஆர் சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள செஸ், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நகர செயலாளர் அன்பரசன், ஒன்றிய பொருளாளர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் சக்தி கிருஷ்ணமூர்த்தி, நகர பொருளாளர் செந்தில் குமார், கணேஷ், இணைச் செயலாளர் வினோத், பொன்சேகர், பாரத், கமல் மற்றும் மகளிர் அணி வனிதா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.1