Shuru
Apke Nagar Ki App…
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சு.இரத்தினவேல்
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று (ஏப்.16) காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வெடிப்பின் தாக்கம் 2 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் போலீஸார் மற்றும் குண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், மின்னஞ்சல் அனுப்பியவரை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேர்தல் காலகட்டத்தில் தொகுதி வரையறையை அவசரமாக கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக வினர் தங்களது இல்லங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு பாராளுமன்ற வரையறையை திருத்த மசோதாவை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் நாங்கள் ஒண்ணும் அதிமுக அடிமை இல்லை நாங்கள் திமுக எதற்கும் அஞ்ச மாட்டோம் மத்திய அரசு போக்கை கண்டித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் சிறப்பா அழைப்பாளர் திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிஷாந்த், திமுக இணைச்செயலாளர் சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,நகர பிரமுகர் சேதுராமன், VTS ராஜவேலு, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணப்பாறையில் கருப்பு கொடி ஏந்தி நகலை எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய வளநாடு , தேனூர், முருகப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (16-04-26) என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எல்.விஜயகுமாரின் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் இப்பகுதியை அதிமுக ,பாஜக, அமமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று திருமயம் அருகே உள்ள வடக்கிப்பட்டி பகுதியில் திமுக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.1