சட்டமன்ற நிகழ்வுகள் வேதனை! சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு.... சேலம் மாநகராட்சி திமுக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், உயரிய சிந்தனைகள் கொண்ட மாபெரும் தலைவர்கள் வழிநடத்திய சட்டப்பேரவையில் தற்போது பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் தற்போதைய ஆளும் தரப்பின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியினரை வேண்டுமென்றே சீண்டி பிரச்சனை எழுப்பும் வகையில் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு சபாநாயகரும் ஒத்துழைப்பு அளிப்பது போல அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை தருவது மிகவும் வேதனை அளிக்கிறது, எனவே இது போன்ற நிகழ்வுகளை இனி ஆளும் தரப்பினர் மேற்கொள்வதை தடுத்து நிறுத்துவதற்கு சபாநாயகரும் அவை முன்ன வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலம் திமுக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
சட்டமன்ற நிகழ்வுகள் வேதனை! சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு.... சேலம் மாநகராட்சி திமுக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், உயரிய சிந்தனைகள் கொண்ட மாபெரும் தலைவர்கள் வழிநடத்திய சட்டப்பேரவையில் தற்போது பேரவையின் மாண்பை குறைக்கும் வகையில் தற்போதைய ஆளும் தரப்பின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியினரை வேண்டுமென்றே சீண்டி பிரச்சனை எழுப்பும் வகையில் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்கு சபாநாயகரும் ஒத்துழைப்பு அளிப்பது போல அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை தருவது மிகவும் வேதனை அளிக்கிறது, எனவே இது போன்ற நிகழ்வுகளை இனி ஆளும் தரப்பினர் மேற்கொள்வதை தடுத்து நிறுத்துவதற்கு சபாநாயகரும் அவை முன்ன வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சேலம் திமுக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
- மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.1
- ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம் திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!1
- மாரண்டஅள்ளி அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தல் – 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, பஞ்சப்பள்ளி, செவத்தம்பட்டு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் புவனமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அதற்கு பதிலாக அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த 4 யூனிட் கிராவல் மண்ணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரிகள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஞ்சப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் அருள் (36), தொட்டபடகாண்டஅள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முனியப்பன் (29), செவத்தம்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் அருண்குமார் (48), வீரமணி (53) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரிகளில் இருந்து தொடர்ந்து சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.1
- காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.1
- கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.1
- குளித்தலையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி கரூர் மாவட்டம்,குளித்தலையில் சரக்கு லாரிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு லாரி ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் அருகே காலை நான்கு முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி நெல் மூட்டை ஏற்றி வந்த வந்த டாரஸ் லாரி கரூரிலிருந்து திருச்சி நோக்கி எம் சாண்டை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டாரஸ் லாரியில் வந்த ஓட்டுனரும் மற்றும் எம் சாண்ட் டிப்பர் ஓட்டி வந்த ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு கார்களும் ஒன்றும் பின் ஒன்றாக மோதிக்கொண்டது காரில் வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை சம்பவம் அறிந்து குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் பிறகு போலீசார் விசாரணையில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிய சேர்ந்த மேகநாதன் என்று தெரியவந்தது மேலும் எம் சாண்ட் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் என்பவர் என்று தெரியவந்தது விபத்து ஏற்பட்ட லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் விபத்து குறித்து குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.1