Shuru
Apke Nagar Ki App…
அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் அன்னவாசல் அருகே கோணகுறிச்சிப்பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகானந்தத்தை கைது செய்தனர்
Batcha
அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் அன்னவாசல் அருகே கோணகுறிச்சிப்பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகானந்தத்தை கைது செய்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். அன்னவாசல் பகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பதாகைகளை தவெக-வினரே அகற்றினர். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் வாழ்த்து பதாகைகளும் வைத்திருந்தனர் இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் பதவி ஏற்பிற்காக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த வாழ்த்துப் பேனர்கள் உள்பட அரசியல் கட்சி பதாகைகளையும் அகற்ற வேண்டும் என்று போலீசார் அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் கூறினர். இதனையடுத்து தவெக நிர்வாகிகள் தாங்கள் வைத்த பதாகைகளை தாங்களே அகற்றினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது3
- கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள கன்னுடைய அய்யனார், சாத்த பிள்ளை அய்யனார் கோவிலில் சித்திரை மாத தேர் திருவிழா கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் மிக விமர்சையாக நடந்தது திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் கிராமத்தில் கண்ணுடைய ஐயனார், சாத்தப்பிள்ளை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த கிராம மக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இந்த நிலையில் அந்த கோவிலில் சித்திரை மாததேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு பாரம்பர முறைப்படி பழமை மாறாமல் தேரோடும் வீதிகளில் பொதுமக்கள் அவர்கள் வீட்டு வாசலில் பசு மாட்டின் சாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட வராட்டியில் பாத்திரம் வைத்து பச்ச அரிசி மற்றும் பசும்பால் இட்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக மே மாதம் 2 ஆம் தேதி காப்பு கட்டி அதன் பிறகு 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கண்ணுடைய அய்யனார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிராம சாவடியிலிருந்து சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது 6ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும் 7 ஆம் தேதி அன்னபட்சி மற்றும் கொள்ளு திண்ணி குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. 8ஆம் தேதி இரவு காவு பிடித்து காவு எரிதல் 9 ஆம் தேதி இரவு சப்பாரத்தில் சுவாமிகள் வீதி உலா 10ஆம் பச்ச பட்டினியும் 11ம் தேதியான அதிகாலை ஆறு மணிக்கு சுவாமிகள் தேரில் ஏற்றப்பட்டு தேர் வடம் பிடித்தலும் அதன் பிறகு முனியாண்டவர் வீதி உலா மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்து தெற்கு தெரு, மேல தெரு, வடக்கு தெரு ஆகிய தெருகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிகண்ணுடைய அய்யனார் மற்றும் சாத்த பிள்ளை அய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் வலம் வந்த பிறகு கண்ணை கவரும் மாணவேடிக்கை விமர்சையாக நடைபெற்றது1
- மானாமதுரை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதி இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு சுற்றுவட்டார 18 கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கிராம மக்களால் வழங்கப்பட்ட பொருட்களை காணாமல் போய்விட்டதாகவும், ஸ்கேன் உள்பட மருத்துவ உபகரணங்கள் செயல்படாததால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் பலரும் பாதிப்படைந்து வருவதாகவும் இதனால் மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார மையத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.1
- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- திருவாடானையில் முதலமைச்சர் விஜய் வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசரின் குருபூஜையை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த பந்தல் மூலம் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படுகிறது. இது கோடைக்கால வெப்பத்தில் பக்தர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.1