Shuru
Apke Nagar Ki App…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம் சூக்கலாம்பட்டி ஊராட்சியில் இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூமலர் பொன்னுசாமி இன்று அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
DHINESH KUMAR
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம் சூக்கலாம்பட்டி ஊராட்சியில் இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூமலர் பொன்னுசாமி இன்று அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டி டிக்கியில் சோதனை. தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் வீராசாமிநாதன் இன்று வேடசந்தூர் பகுதியில் பொதுமக்களிடம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாயனூர் அணை திட்டம் திமுக ஆட்சியில் தான் அரசாணை வெளியிடப்பட்டது. ஆட்சி அமைந்த உடன் அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னாங்கொம்பு பகுதியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திமுக கூட்டணி கட்சி மமக வேட்பாளர் ப.அப்துல் சமது உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.2
- அவிநாசியில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று தேர்தல் பணிமனை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாராளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டார்கள். சமூக நீதிப் பேசி ஏமாற்றும் திமுகவை பெண்கள் இனி மன்னிக்க மாட்டார்கள் என பேட்டி அளித்தார்.1
- இராசிபுரம் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து வெண்ணந்தூர் திமுக நிர்வாகிகள் செயலாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்1