Shuru
Apke Nagar Ki App…
6374038361
ᴍ ɴᴀᴠᴇᴇɴ ᴋᴜᴍᴀʀ
6374038361
More news from தமிழ்நாடு and nearby areas
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெலாந்துறை,பொன்னேரி,கொத்தட்டை,திருவட்டத்துறை,கொடிக்கலம்,கூடலூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.வெ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பின்னர் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப்பெற்றார்.இதில் கட்சியினர்,அதிகாரிகள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூசணி விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை தைப்பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் பூசணிக்காய் விளைச்சலும் விலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் பூசணிக்காய்களின் வரத்து அதிகரித்து, நல்ல விலை கிடைக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வழிபாட்டில் முக்கிய இடம் பெறும் பூசணிக்காயை நம்பி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் இப்பகுதிகளில் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் பனி மற்றும் பூச்சி தாக்குதலால் பல இடங்களில் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு கிலோ ரூ.50 வரை விற்பனையான பூசணிக்காய், தற்போது ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விலை கிடைப்பதால், விதை, உரம், ஆட்கள் கூலி உள்ளிட்ட முதலீட்டு செலவுகளை கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் சுமை அதிகரித்து, வரும் நாட்களில் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு அல்லது நிதியுதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- இன்றிரவு புத்தாண்டை வரவேற்கும் நாம் பனி நிறைந்த குளிரில் எல்லையை காக்கும் வீரர்களை பற்றியும் சிந்திப்போம். நம்மை காக்க தான்.1
- கரும்பை கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை புதுக்கோட்டை அடுத்த சிரஞ்சுனை, பெருஞ்சுணை, செல்லக்குடி, மேட்டுப்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடையில் கரும்பு வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- *தேனியில் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயிலில் ஆண்டின் கடைசி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அள்ளினத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று இந்த ஆண்டின் கடைசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி தலையில் கிரீடம், ஆபரணங்கள் அணிவித்து வண்ணமலர் மலைகளால் மயில் வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருகப்பெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருக பெருமானை தரிசித்துச் சென்றனர்1
- சகோதரரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய வீடியோ வைரல் – நிலவழி தகராறில் ஒருவர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவயல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறில், தனது பெரியப்பா மகனான குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறி, காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முனியப்பன் தெரிவிப்பதாவது, தனது நிலத்திற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து, வழி விட மறுத்ததன் காரணமாக நிலவழி பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனுடன் தொடர்பாக குமரேசன் மற்றும் திவ்யா தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று முனியப்பனின் தாய் ஜானகி, தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தங்கள்மீது பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முனியப்பனை குமரேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இச்சம்பவம் குறித்து மீண்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.2
- நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.1
- பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு1