Shuru
Apke Nagar Ki App…
Prasanth
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Prasanth1
- கந்தர்வகோட்டையில் தோழர் S.ராஜேந்திரன் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டம்.4
- அன்னவாசல் பகுதிகளில் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வருகின்ற செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது இதற்காக அன்னவாசல் பகுதியில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, புல்வயல், மதியநல்லூர், அன்னவாசல், இலுப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் இன்று நடந்தது இதில் அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன1
- காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்1
- லிட்டர் இமானுவேல் 69 ஆவது குருபூஜை விழா திமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை. விக்டர் இம்மானுவேல் 69 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு விக்டர் இம்மானுவேல் திருவுருவப்படத்திற்கு திமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னால் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், உன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவன் நடராஜன், சித்தூர் மணிவேல் நகராட்சி கவுன்சிலர்கள் சுபஸ்ரீ பாலகுமார், முகேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட் கார்த்திக், கிளைச் செயலாளர் முருகன், புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பட்டாசு செந்தில், மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.1
- சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.1
- கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கே குமார் செய்தியாளர் முசிறி கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1