Shuru
Apke Nagar Ki App…
காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
Kumar reports musiri
காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாள்:மலர் தூவி மரியாதை கரூர் மாவட்ட அதிமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கரூர் பழனியப்பா தெரு பகுதியில் உள்ள கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்மான சின்னசாமி மற்றும் அதிமுக கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.1
- அன்னவாசல் பகுதிகளில் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வருகின்ற செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6-ம்வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது இதற்காக அன்னவாசல் பகுதியில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, புல்வயல், மதியநல்லூர், அன்னவாசல், இலுப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சோதனை ஓட்டம் இன்று நடந்தது இதில் அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன1
- அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்1
- அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்1
- தவெக மாநில கட்சி அங்கீகாரம் பிரியாணி வழங்கி புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கொண்டாட்டம் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகில், தமிழக வெற்றி கழகத்தை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்கும் வகையிலும், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நல்லாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 500 ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.17-வது வாரமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட நிர்வாகி தனசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, பி.ஆர். பிரவீன், நரிமேடு பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் சதீஷ், ரமேஷ், பி.ஆர். பிரபு, கோகுல், பிரவீன், வினோத், மணி, சுப்புராம், ஹரி, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததை வரவேற்கும் வகையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் – திமுக சார்பில் மரியாதை கரூர் மாவட்ட திமுக சார்பில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தியாகி இமானுவேல் சேகரனாரின் தியாகத்தையும், சமூக நீதிக்கான அவரது பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ என ஏராளமான கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.1
- புதுக்கோட்டை மாநகராட்சி இருபதாவது வார்டுகு ட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியில் திருச்சி எம்பி நியாய விலை கடை திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியான திருவப்பூர் சோழா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திருச்சி எம் பி துரை வைகோ திறந்து வைத்து இந்த நியாய விலை கடையில் மக்கள் பொருட்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று உரையாற்றினார்1
- சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.1