Shuru
Apke Nagar Ki App…
சேலம் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம்! லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலாளர் வேணுகோபால், மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெயகாந்தன் முன்னிலையில், இன்று புதிய நிர்வாகிகள் சேர்க்கை, சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் பரமசிவத்திற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பதவியும், மற்றும் கார்த்திக் என்பவருக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மேகலா தலைமையில் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Rajendran
சேலம் மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம்! லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலாளர் வேணுகோபால், மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெயகாந்தன் முன்னிலையில், இன்று புதிய நிர்வாகிகள் சேர்க்கை, சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் பரமசிவத்திற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பதவியும், மற்றும் கார்த்திக் என்பவருக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மேகலா தலைமையில் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்... சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.2
- மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.1
- ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- பாலக்கோடு: சாமியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் சாமியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் சாமியார் நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.1
- கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.1