மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி Ex.MP தலைமையில் உடுமலை தொகுதி குடிமங்கலத்தில் கழக ஆலோசனை கூட்டம்... திருப்பூர புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள் வாரியாக ஒன்றியக்கழகச் செயலாளர் ஏற்பாட்டில் கழக ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி Ex.MP தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கழகசெய்தித் தொடர்பாளர் பொங்கலூர் மணிகண்டன் , கழக இலக்கிய அணித் துணைச் செயலாளர் பண்ணையார் பழனிசாமி , உடுமலை நகர கழகச் செயலாளர் நாகராஜ், ஒன்றியகழகசெயலாளர்கள் செல்வராஜ் , கார்த்திகேயன் , பாலசுப்பிமணியம் , அன்பர்ராஜன் , சோமசுந்தரம் மற்றும் மாவட்டசார்புஅணிநிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உடுமலை மு.இளஞ்செழியன், இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் சிவசுப்பிரமணியம், வர்த்தக அணிச் செயலாளர் ரவிச்சந்திரன் கைத்தறி பிரிவு செயலாளர் கந்தசாமி, விவசாய அணி செயலாளர் முருகானந்தம், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் விருகல்பட்டி பிரகாஷ், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் வெங்கடேஷ் இலக்கிய அணிச் செயலாளர் நாகராஜ் மற்றும் சார்பு அணிகளின் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி Ex.MP தலைமையில் உடுமலை தொகுதி குடிமங்கலத்தில் கழக ஆலோசனை கூட்டம்... திருப்பூர புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகள் வாரியாக ஒன்றியக்கழகச் செயலாளர் ஏற்பாட்டில் கழக ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் சி.சிவசாமி Ex.MP தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கழகசெய்தித் தொடர்பாளர் பொங்கலூர் மணிகண்டன் , கழக இலக்கிய அணித் துணைச் செயலாளர் பண்ணையார் பழனிசாமி , உடுமலை நகர கழகச் செயலாளர் நாகராஜ், ஒன்றியகழகசெயலாளர்கள் செல்வராஜ் , கார்த்திகேயன் , பாலசுப்பிமணியம் , அன்பர்ராஜன் , சோமசுந்தரம் மற்றும் மாவட்டசார்புஅணிநிர்வாகிகள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உடுமலை மு.இளஞ்செழியன், இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் சிவசுப்பிரமணியம், வர்த்தக அணிச் செயலாளர் ரவிச்சந்திரன் கைத்தறி பிரிவு செயலாளர் கந்தசாமி, விவசாய அணி செயலாளர் முருகானந்தம், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் விருகல்பட்டி பிரகாஷ், எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் வெங்கடேஷ் இலக்கிய அணிச் செயலாளர் நாகராஜ் மற்றும் சார்பு அணிகளின் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1
- ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.2
- மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்1
- இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.1
- கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்1
- கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! “கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்! தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1