logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டி வட்டம் முருகன் சூளையில், டன் கணக்கில் பனைமரங்கள் குவிக்கப்பட்டு அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய மரமான பனை, முறையான அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருமாண்டபதி, அருணபதி மற்றும் கதவணி உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏரிகள் மற்றும் ஆற்றோரம் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி பெறாத சூளைகளை உடனடியாக மூடுவதுடன், பனைமரங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

10 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
10 hrs ago

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டி வட்டம் முருகன் சூளையில், டன் கணக்கில் பனைமரங்கள் குவிக்கப்பட்டு அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய மரமான பனை, முறையான அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருமாண்டபதி, அருணபதி மற்றும் கதவணி உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏரிகள் மற்றும் ஆற்றோரம் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி பெறாத சூளைகளை உடனடியாக மூடுவதுடன், பனைமரங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஒசூர் கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற பாசனக் கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஓசூர் தொகுதி ஆளூர் பகுதி முதல் சூளகிரி தொகுதி வரை உள்ள கால்வாய் பகுதிகளை இருசக்கர வாகனத்தில் சென்றே அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணியின்போது, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களிலும் நேரில் சென்று பணிகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அவர் பார்வையிட்டார். கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இந்தக் கால்வாய் சீரமைப்பிற்காக ₹8.5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கால்வாய் சீரமைப்புப் பணிகள் தற்போது 80 விழுக்காடு நிறைவடையும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள சீனிவாசன், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஜூலை மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து, பாசனத்திற்காகக் கால்வாயில் தண்ணீர் திறந்து விட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது உள்ளூர் விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    ஒசூர் கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற பாசனக் கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஓசூர் தொகுதி ஆளூர் பகுதி முதல் சூளகிரி தொகுதி வரை உள்ள கால்வாய் பகுதிகளை இருசக்கர வாகனத்தில் சென்றே அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணியின்போது, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களிலும் நேரில் சென்று பணிகளின் தரத்தையும் முன்னேற்றத்தையும் அவர் பார்வையிட்டார்.

கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இந்தக் கால்வாய் சீரமைப்பிற்காக ₹8.5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கால்வாய் சீரமைப்புப் பணிகள் தற்போது 80 விழுக்காடு நிறைவடையும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள சீனிவாசன், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஜூலை மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்து, பாசனத்திற்காகக் கால்வாயில் தண்ணீர் திறந்து விட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது உள்ளூர் விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Mahanagar paarvai
    Mahanagar paarvai
    Photographer ஓசூர், கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில், தாகம் காரணமாக தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று வழிமாறி கிராமத்திற்குள் புகுந்தது. கிராமப்பகுதிக்குள் மான் அங்கும் இங்கும் அலைந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள், அந்த மான் நாய்களிடம் சிக்காமல் இருக்கத் துரிதமாகச் செயல்பட்டு அதனை மீட்டனர். மான் மீட்கப்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் மீட்ட அந்தப் புள்ளி மானை ஒப்படைத்தனர். கிராம மக்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டிய வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மீட்கப்பட்ட அந்த மானைப் புதூர்நாடு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில், தாகம் காரணமாக தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று வழிமாறி கிராமத்திற்குள் புகுந்தது. கிராமப்பகுதிக்குள் மான் அங்கும் இங்கும் அலைந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள், அந்த மான் நாய்களிடம் சிக்காமல் இருக்கத் துரிதமாகச் செயல்பட்டு அதனை மீட்டனர்.

மான் மீட்கப்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் மீட்ட அந்தப் புள்ளி மானை ஒப்படைத்தனர். கிராம மக்களின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டிய வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மீட்கப்பட்ட அந்த மானைப் புதூர்நாடு வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
    user_V ramani
    V ramani
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமின் போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 114 பயனாளிகளுக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1.82 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் 47 பேருக்கு 7.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமின் போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 114 பயனாளிகளுக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1.82 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் 47 பேருக்கு 7.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    21 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன.

தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டி வட்டம் முருகன் சூளையில், டன் கணக்கில் பனைமரங்கள் குவிக்கப்பட்டு அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய மரமான பனை, முறையான அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருமாண்டபதி, அருணபதி மற்றும் கதவணி உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏரிகள் மற்றும் ஆற்றோரம் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி பெறாத சூளைகளை உடனடியாக மூடுவதுடன், பனைமரங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டி வட்டம் முருகன் சூளையில், டன் கணக்கில் பனைமரங்கள் குவிக்கப்பட்டு அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய மரமான பனை, முறையான அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கருமாண்டபதி, அருணபதி மற்றும் கதவணி உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏரிகள் மற்றும் ஆற்றோரம் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி பெறாத சூளைகளை உடனடியாக மூடுவதுடன், பனைமரங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.