logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

1 day ago
user_SURENDIRAVARMA. C
SURENDIRAVARMA. C
Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
1 day ago

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமின் போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 114 பயனாளிகளுக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1.82 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் 47 பேருக்கு 7.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். முகாமின் போது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 114 பயனாளிகளுக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1.82 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் 47 பேருக்கு 7.56 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு வசதி திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    22 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 20-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதால் மதுப்பிரியர்களிடையே பிரச்சனை எழுவதாகவும், இதனால் ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சம்பளத்தை 25 சதவீதம் உயர்த்தியும் அறிவித்த நிலையில், தங்களது செலவுகளை ஈடு செய்ய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தனியார் மதுக்கடைகளில் அரசு மதுக்கடையை விட பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக பாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு கடைகளில் வாங்கப்படும் பாட்டில்களை 10 ரூபாய்க்கு திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தனியார் கடைகள் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில்லை என்பதால் மது பாட்டில்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன.

தமிழக அரசு மதுக்கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 day ago
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் நர்மதா (19) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் பெருமாள் (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். டிப்ளமோ படித்துள்ள நர்மதாவும், பட்டதாரியான பெருமாளும், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இன்று காலை பாலக்கோடு அருகே உள்ள மணியாகரன் கொட்டாய் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர்களுக்குப் பயந்து பாதுகாப்பு கோரி இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையம் வந்த பெண்ணின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், காதலனுடன்தான் செல்வேன் என்று நர்மதா உறுதியாகக் கூறியதால், காவல்துறையினர் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், போக்குவரத்து துறை அமைச்சருமான தமிழன் ஆ பார்த்திபன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    1
    சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், போக்குவரத்து துறை அமைச்சருமான தமிழன் ஆ பார்த்திபன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியை, இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் கிரிக்கெட் பார்த்த இந்த செயல், நோயாளிகளிடையேயும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியாளர்கள் கிரிக்கெட் பார்க்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆத்தூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியை, இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் கணினியில் பணியாளர்கள் கிரிக்கெட் பார்த்த இந்த செயல், நோயாளிகளிடையேயும், அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியாளர்கள் கிரிக்கெட் பார்க்கும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    5 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டி வட்டம் முருகன் சூளையில், டன் கணக்கில் பனைமரங்கள் குவிக்கப்பட்டு அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய மரமான பனை, முறையான அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கருமாண்டபதி, அருணபதி மற்றும் கதவணி உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏரிகள் மற்றும் ஆற்றோரம் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி பெறாத சூளைகளை உடனடியாக மூடுவதுடன், பனைமரங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டி வட்டம் முருகன் சூளையில், டன் கணக்கில் பனைமரங்கள் குவிக்கப்பட்டு அழிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய மரமான பனை, முறையான அனுமதியின்றி செங்கல் சூளைகளுக்காக வெட்டப்படுவதாகவும், இதில் கிராம நிர்வாக அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கருமாண்டபதி, அருணபதி மற்றும் கதவணி உள்ளிட்ட பகுதிகளில் முறையான அனுமதி பெறாத பல செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏரிகள் மற்றும் ஆற்றோரம் வளர்ந்துள்ள பனைமரங்களை வெட்டி சூளைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி பெறாத சூளைகளை உடனடியாக மூடுவதுடன், பனைமரங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.