Shuru
Apke Nagar Ki App…
பிரதமர் குறை சொல்ல முடியாது -நயினார் நாகேந்திரன் கல்லாலங்குடி பகுதியில் பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் சார்பாக சுதேசி சுய வேலைவாய்ப்பு திட்டத் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஜனநாயகன் படம் மட்டுமல்ல நிறைய படங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்காக பிரதமரை குறை சொல்ல முடியாது. சென்சார் போர்டைத்தான் கேட்க வேண்டுமென' தெரிவித்தார்
நம்ம ஊரு புதுக்கோட்டை
பிரதமர் குறை சொல்ல முடியாது -நயினார் நாகேந்திரன் கல்லாலங்குடி பகுதியில் பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் சார்பாக சுதேசி சுய வேலைவாய்ப்பு திட்டத் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஜனநாயகன் படம் மட்டுமல்ல நிறைய படங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்காக பிரதமரை குறை சொல்ல முடியாது. சென்சார் போர்டைத்தான் கேட்க வேண்டுமென' தெரிவித்தார்
More news from Tamil Nadu and nearby areas
- மலையூர் சாக்கடையால் பொதுமக்களுக்கு தொல்லை! மலையூர் பகுதியில் தோரண வாய்க்காலை பராமரிப்பு பணி செய்யாத காரணத்தினால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தோரண வாய்க்காலில் ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் தோரண வாய்க்காலை பராமரித்து பணி செய்ய பொதுமக்கள் ஊராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத உயர்வு - மல்லிகை கிலோ ரூ.10000க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தைப்பொங்கல் பண்டிகை, தை அமாவாசை, சுபமுகூர்த்த நாட்கள் வருவதையொட்டி மற்றும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைவால் மல்லிகை கிலோ ரூ.10,000, முல்லை ரூ.3000, ஜாதிப்பூ ரூ.2500க்கு, கனகாம்பரம் ரூ.2000 என அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து விற்பனையாகி வருகிறது விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- நவீன சுகாதார வளாகம் திறப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கோரமண்டல் உர தொழிற்சாலை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைக்க இன்று (ஜன.9) சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வருகை தந்தார். தொடர்ந்து, அரசு பள்ளி மாணவியை கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.1